Posts

நாவல்பழ ருசி

Image
ஒரு ஜென் குருவிற்கு மிகவும் வயதாகி விட்டது மரணம் நெருங்கி வருவது தெரிந்தவுடன் தன்னுடைய சீடர்களை அழைத்தார். சீடர்கள் அனைவரும் குரு தங்களுக்கு ஏதோ சொல்லிக்கொடுக்கப் போகிறார் என்று அருகில் வந்தார்கள். "நான் இன்று மாலை நேரத்திற்குள் இறந்துவிடுவேன்" என்று தெரிவித்தக் குருவை அவர்கள் அனைவரும் கவலையுடன் பார்த்தனர். விஷயத்தை அறிந்தவுடன் வெளியில் சென்றிருந்த சீடர்கள், ஆசிரமத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சீடர்கள், குருவிற்குப் பழக்கமானவர்கள், தெரிந்தவர்கள் என அனைவரும் அவரைப் பார்ப்பதற்காக வந்து கொண்டே இருந்தார்கள். அப்போது ஆசிரமத்தில் இருந்த அனுபவம் வாய்ந்த சீடர் ஒருவர் கடைவீதிக்குப் புறப்பட்டார். மற்ற சீடர்களுக்கெல்லாம் ஒரே கோபம். குரு மரணப் படுக்கையில் இருக்கும்போது கடைவீதியில் என்ன வாங்க வேண்டியிருக்கிறது என்று சத்தம் போட்டார்கள். " நம்முடைய குருவிற்கு நாவல் பழம் மிகவும் பிடிக்கும். அதனால் அவருக்கு அதை வாங்கித் தரலாம் என்று தான் நான் கடைவீதிக்குப் புறப்பட்டேன்" என்று பதிலளித்தார் அந்தச் சீடர். " சரி சரி சீக்கிரமாக வாங்கி வந்து குருவிற்குக் கொடுத்து விடு" என்றா

மெளனத்தைவிட சிறந்தது

Image
ஒரு மடாலயத்தில் பல ஜென் குருக்களும், பல சீடர்களும் வாழ்ந்து வந்தனர். அங்கே ஒரு வித்தியாசமான விதிமுறை நடைமுறையில் இருந்தது. மெளனத்தைவிடச் சிறப்பாகப் பேசமுடியுமென்றால் பேசவேண்டும் என்பதே அது. வகுப்பறையில் குரு மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தார். மாணவர்கள் அவரை அமைதியாகப் பார்த்தபடியே இருந்தனர். அவரும் அமைதியாக மாணவர்களைப் பார்த்தார். நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. அப்போது வகுப்பறையின் அருகில் இருந்த மரத்திலிருந்த பறவை ஒன்று கூவிய சத்தம் கேட்டது. " அவ்வளவுதான் இன்றைக்குப் பாடம் முடிந்தது" என்று சொல்லிய குரு எழுந்து வெளியில் சென்றார்.

மனமே சொர்க்கம்

Image
ஒரு கிராமத்தில் இரண்டு சகோதரர்கள் வசித்து வந்தனர். அண்ணனிடம் 99 பசுக்கள் இருந்தன. தம்பியிடம் ஒரே ஒரு பசு இருந்தது. இருந்த ஒரு பசுவில் பால் கறந்து வீட்டில் உள்ள அனைவரின் தேவைக்கு எடுத்தது போக மீதியிருந்த பாலை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு விற்று அதில் வரும் பணத்தை மற்ற தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வான். கொஞ்சமாக நிலமும் இருந்தது. அதில் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்தான். பயிர்கள் செழித்து வளர்ந்தன. அதைக் கொண்டு தன் வாழ்வை மிகவும் நிம்மதியாக, மிகவும் மகிழ்ச்சியாகக் கழித்து வந்தான். ஆனால் 99 பசுக்கள் வைத்திருந்த அண்ணனோ மகிழ்ச்சியாக இல்லை. இன்னும் ஒரே ஒரு பசு வாங்கி விட்டால் நூறு பசுவாகி விடும் என்ற நினைப்போடு அலைந்து திரிந்தான்.

இயல்பாக இருத்தல்

Image
. இரண்டு ஜென் குருக்கள் நண்பர்களாக இருந்தனர். அவர்கள் மாலை நேரத்தில் காற்று வாங்குவதற்காக மெதுவாக நடந்து செல்வது வழக்கம். அன்றும் அப்படித்தான் அவர்கள் ஒய்வாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். ஆற்றின் ஒரமாக அவர்கள் நடந்துக் கொண்டிருந்த போது அவர்கள் கண்ணெதிரிலேயே ஒரு தேள் தவறிப்போய் ஆற்றில் விழுந்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்களில் ஒருவர் பதைபதைத்துப் போய் அதை வெளியில் எடுக்க முயற்சித்தார். அவரின் கையில் அது கடுமையாகக் கொட்டியது. உடனே தவறிப்போய் மீண்டும் ஆற்றில் விழுந்தது. அவர் மீண்டும் எடுக்க முயற்சித்தார். அது மீண்டும் கடுமையாகக் கொட்டியது. மறுபடியும் தவறிப்போய் தண்ணீரில் விழுந்தது. இந்தச் செயல் பலமுறை மீண்டும் மீண்டும் நடந்தது. "அதுதான் உங்களை திரும்பத் திரும்பக் கொட்டுகிறதே. அதை ஏன் காப்பாற்றுகிறீர்கள்?"  என்றார் மற்றொரு குரு. "கொட்டுவது அதன் இயல்பு, காப்பாற்றுவது என் இயல்பு. நான் எந்தச் சூழலிலும்  என் இயல்பை மாற்றிக் கொள்வதாக இல்லை" என்று கூறிய அவர் ஒரு கம்பைக் கொண்டு அந்தத் தேளைக் காப்பாற்றிக் கரையில் விட்டுவிட்டே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார். மற்றொருவர் அன்றைய த

தவளையாக இருங்கள்

Image
ஜென் துறவி தனது சீடர்களுக்கு வழக்கம் போல் கதைெ செ சொல்லத் தொடங்கினார். ஒருமுறை தவளைகளுக்கிடையே போட்டி ஒன்று நடைபெற்றது. உயரமாக இருந்த குன்று ஒன்றின் உச்சியை யார் முதலில் அடைவது என்பதே போட்டி. அனைத்துத் தவளைகளும் போட்டி ஆரம்பிக்கும்போது உற்சாகமாகத்தான் இருந்தன. ஆனால் நேரம் செல்லச் செல்ல குன்றின் கால்வாசித் தூரத்தை அடையும்போதே பல தவளைகள் அதற்கு மேல் மேலே ஏற முடியாமல் தங்கள் முயற்சியைக் கைவிட்டன. அவை கீழே விழுந்தவுடன் சும்மா இருக்கவில்லை. ஏறிக் கொண்டிருந்த தவளைகளைப் பார்த்து. "இதற்குமேல் ஏறுவது யாராலும் முடியாது. உச்சியை அடைவதையெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது" என்று சத்தமாகச் சொல்லிக்கொண்டே இருந்தன. அவை சொல்வதைக் கேட்ட மற்ற தவளைகளும் மனம் சோர்ந்து அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாகக் கீழே விழுந்தன. ஒரே ஒரு தவளை மட்டும் மேலே மேலே ஏறிக் கொண்டே இருந்தது. அனைத்துத் தவளைகளும் ஒன்றுசேர " உன்னால் மேலே ஏற முடியாது கீழே வந்து விடு" என்று கத்தின. ஒருவழியாக தான் நினைத்ததை அந்தத் தவனை சாதித்து விட்டது. உயரே சென்று வெற்றி பெற்று விட்டது. அனைத்துத் தவளைகளுக்கும் ஒரே ஆச்சிரியம்.

ஞானம்

Image
ஒரு இளைஞனுக்கு திடீரென்று சந்தேகம் வந்தது, ஞானம் என்றால் என்ன? தன் முன்னால் வரும் அனைவரிடமும் அதே கேள்வியைக் கேட்கத் தொடங்கினான். ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகத் தங்கள் மனதில் தோன்றிய பதிலைச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் சொன்ன பதில் எதுவும் அவனுக்குத் திருப்தியளிக்கவில்லை. துறவிகள், முனிவர்களிடம் சென்று கேட்டால் உனக்குப் பதில் கிடைக்கும் என்றார்கள் சிலர். அவனும் துறவிகள் பலரைச் சந்தித்துத் தன்னுடைய கேள்விக்கணையைத் தொடுத்தான். பல துறவிகள் ஒட்டமெடுத்தார்கள். வேறு சிலர் சொன்ன பதில் அவனுக்குப் புரியவில்லை. கடைசியாக ஒரு ஜென் குருவைச் சந்தித்தான். அவர் ஒரு பாறையின் மீது அமர்ந்திருந்தார். அவரிடம் சென்ற அவன் வழக்கமான கேள்வியை எடுத்து விட்டான். அவர் நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் குனிந்து கொண்டார். அவன் மீண்டும் தன் கேள்வியைக் கோட்டான். அவர் எழுந்து நடக்கத் தொடங்கினார். அவன் விடாமல் அவர் பின்னால் சென்று அதே கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டான். வெகுதூரம் நடந்தபின் அவனுக்குச் சலிப்பு ஏற்ப்பட்டது. ஒருவேளை இவருக்குத் தான் கேட்ட கேள்வி புரியவில்லையோ? என்று நினைத்து மீண்டும் ஒரு முறை தனது கேள்வி

உறுதி

Image
ஒரு கிராமத்தில் வில்வித்தையில் மிகவும் புகழ் பெற்ற ஒரு இளைஞன் இருந்தான். அதே ஊரின் எல்லையில் இருந்த காட்டுக்குள் ஒரு ஜென் துறவி வசித்து வருவதாகவும் அவர் இவனைவிட வில் வித்தையில் பெயர் பெற்றவர் என்பதும் அவனுக்குத் தெரியவந்தது. இந்த உலகில் என்னைவிட யாரும் வில்வித்தையில் திறமை படைத்தவராக இருக்க முடியாது என்று மனதில் எண்ணிய படியே இது மாப்புடன் அவரைப் பார்க்கக் கிளம்பினான். அவரை பார்த்து, தன்னோடு வில் வித்தைப் போட்டியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்  கொண்டான். அவர் அவனைப் பார்த்து புன்னகைத்தபடியே, " நான்  சொல்லும் இடத்திற்கு வா, அங்கே போட்டியை வைத்துக் கொள்ளலாம்" என்று கூறினார். அவனும் அவர் கூறிய இடத்திற்குச் சென்றான். மலை உச்சிக்கு அவனை அழைத்துச் சென்றார். கீழே அதள பாதாளம். ஒரு அடி தவறினாலும் எலும்பு கூட கிடைக்காது. அப்படிப்பட்ட ஒரு இடத்தில் நின்றுகொண்டு அருகே இருந்த மரத்தில் உள்ள பழத்தைக் குறிவைத்து அடிக்கும்படி கூறினார். அவன் முயன்று பார்த்தான். கால்கள் லேசாக நடுங்கின குறி தவறியது. தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்ட அவன், "நீங்கள் சரியாக அடித்து விடுவீர்களா?"என்று கேட்டான்.

யானைக் கட்டு

Image
வேடன் ஒருவன் காட்டிற்குள் சென்று பெரிய குழிகளை வெட்டி வைப்பான். அந்த வழியாக வரும் யானைகளில் ஏதாவது ஒன்று அந்தக் குழிக்குள் தவறி விழுந்துவிடும். சில நாட்கள் அந்த குழியிலிருந்து வெளியில் வரத் தன்னால் முடிந்த அளவு போராடிப் பார்க்கும். பின்னர் சிறுது சிறிதாக தன்னுடைய நம்பிக்கையை இழக்க ஆரம்பிக்கும். பின்னர் அதனைத் தக்க பாதுகாப்போடு தன் இடத்திற்குக் கொண்டுவந்து மிகப்பெரிய இரும்புச் சங்கிலிகளைக் கொண்டு கட்டி வைப்பான். முடிந்தவரை சங்கிலிகளை அறுத்தெறிந்துவிட்டுத் தப்பித்து விடலாம் என்று யானை முயற்சி செய்யும். சில மாதங்கள் வரை அந்தப் போராட்டம் தொடரும். அதன்பிறகு அவன் அந்த யானைகளின் கால்களில் உள்ள சங்கிலிகளை அகற்றிவிட்டு சிறிய கயிறு கொண்டு கட்டி விடுவான். யானை நினைத்தால் அந்தக் கயிற்றை எளிதாக அறுத்து விட்டுத் தப்பித்துவிடலாம். ஆனால் யானை தப்பிக்க முயற்சி செய்யாது. ஏனென்றால் முன்னர் பலமான சங்கிலியால் கட்டப்பட்டிருந்த போது அவற்றை இழுத்து இழுததுக் கால்களில் காயம்பட்டதன் நினைவாகக் கயிற்றை இழுக்கச் சற்றும் முயற்சி செய்து பார்க்காது. நாம் யானை போல் இருக்க கூடாது. முயற்சி செய்வதை எந்தச் சூழலிலும், எத்தக

ஒப்பிடாதே

Image
குரு தனது நண்பருடன் ஆற்றங்கரையோரமாக நடந்துக் கொண்டிருந்தார். இருவரும் பல விஷயங்களைப் பற்றிப் பேசியப் படியே சென்றனர். குரு அழகழகாக ஆற்றில் நீந்திச் சென்ற மீன்களைப் பார்த்து. " இந்த மீன்கள் எவ்வளவு சந்தோஷமாக நீந்திக் செல்கின்றன" என்றார். அவரின் நண்பர், " நீங்கள் ஒரு மீன் கிடையாது. அப்படி இருக்கும்போது, அவை அனைத்தும் சந்தோஷமாகத்தான் நீந்திச் செல்கின்றன என்பதை எப்படி உங்களால் உறுதியாகக் கூற முடியும்?" என்று கேட்டார். உடனே அந்த குரு, " நீ ஒருபோதும் நானாக முடியாது. எனவே அந்த மீன்களின் சந்தோஷத்தை உன்னால் உணர முடியாது" என்றபடியே தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

நரியும் பூனையும்

Image
நரி பூனையிடம் தற்பெருமை பேசிக் கொண்டது, " எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?" எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும் என்றது பூனை. அப்போது பெரிதாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் சப்தம் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சியில் ஏறிக் கொண்டது. நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்த தந்திரத்தைப் பயன்படுத்துவது என்று யோசனையில் கால தாமதமாகி அவர்களிடம் மாட்டிக் கொண்டது. நாம் பல நேரங்களில் இப்படித்தான் பணம் சம்பாதிப்பதற்கு ஆயிரம் வழி தெரிந்தாலும் அதில் ஒன்றிலும் முழு மனதுடன் இறங்காமல் பலவற்றிலும் கால் வைத்துத் தோல்விகளை ஏற்படுத்திக் கொள்வோம். ஆனால் எதுவும் தெரியாதவன் தனக்கு தெரிந்தவற்றில்  முழு மனத்துடன் ஈடுப்பட்டு மிகப்பெரிய செல்வந்தவர்களாக மாறிவிடுகின்றனர். இதுவே வெற்றிக்கான சரி பாதை ஆகும். 

அலட்சியம்..!

Image
ஒரு அரசன் தன் நாட்டு மக்களுக்கு ஒர் போட்டி ஒன்றை அறிவித்தான்.அந்த போட்டியில் வெல்வருக்கு தன் அழகிய மகளை திருமணம் செய் செய்து தருவதாக அறிவித்தார். ஆதலால் அதில் கலந்துக் கொள்ள பல இளைஞர்கள் ஆர்வம் அடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் போட்டிகள் நடந்தன. ஆனால் இறுதியாக ஒரு இளைஞன் மட்டும் தேர்வுப் பெற்றான். கடைசியாக, அந்த இளைஞனுக்கு அரசர் ஒர் வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவித்தார். நான் வளர்க்கும் மூன்று காளைகளை  அடுத்தடுத்து அவிழ்த்து விடுவேன். அதில் ஏதாவது ஒன்றின் வாலை நீ தொட்டால் போதும், நீயே என் மகளுக்கு கணவன் என்றார். அந்த இளைஞன் மிக கடினமான போட்டியில் எல்லாம் தேர்ச்சி பெற்றோம். இது என்ன சாதரணம்! என்று அலட்சியத்துடன் இருந்தான். மாடுகள் அடைக்கப்பட்டிருந்த  தொழுவத்தின் கதவுகள் திறந்தது. அரசர் வளர்க்கும் மாடு என்றால் சும்மாவா,  முதலில் ஒரு மாடு வந்தது. அது பெயருக்கு தான் மாடு, அது ஒரு யானை மாதிரி இருந்தது. அதைக் கண்டு மிரண்ட இளைஞன் அதன் அருகில் வர தயங்கினான்.அந்த மாடு வந்த வேகத்தில் தடுப்பைத் தாண்டி மின்னல் வேகத்தில் ஒடியது.  அது தான் இன்னும் இரண்டு மாடுகள் இருக்கிறது என்று மேலும் அலட்சியமாக இருந

வெற்றி நமதே...!

Image
துருக்கியின் அரசன் ஒரு நாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஒர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான். அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக் கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்.  அரசன் காலையில் எழுந்து கொண்ட போது நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியைப் பார்த்து, " இது என்ன உனது இடது கையில் கயிறு?" என்று கேட்டான். தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது. குழந்தை அழுதால் இதை இழுப்பேன் என்றான். நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. " இந்தக் குச்சி எதற்கு?"  எனக் கேட்டான் அரசன். " வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காய்ப் போட்டிருக்கிறாள். இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன். இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது" என்றான். அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான். "இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்?&quo

பிறருக்கு நல்ல நினைத்தால் நமக்கும் நல்லதே நடக்கும்.

Image
ஒரு அரசருக்கு மூன்று மகன்கள்.. தனக்கு பின் நாட்டை யார் கையில் கொடுப்பது? என்பதற்காக அவர்களை அழைத்து ஒரு போட்டி வைத்தார்.. காட்டிற்கு சென்று ஒரு சாக்கு நிறைய இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவை கொண்டு வந்து ஆளுக்கொரு ஏழைக்கு அவ்வுணவை கொடுக்க வேண்டும். ஆனால் மூட்டையை எனக்கு பிரித்துக் காட்ட தேவையில்லை என்றார் அரசர். முதலாமவன் மரத்தில் ஏறி நல்ல பழங்களை பொறுக்கி மூட்டை கட்டிக்கொண்டான். இரண்டாமவன் சோம்பல் பட்டு கீழே விழுந்த அழுகிய பழங்களை பொறுக்கி  மூட்டை கட்டினான். மூன்றாமவன்  ஏழைக்குத்தானே கொடுக்கப்போகிறோம் என்று அலட்சியமாக கீழே கிடந்த குப்பைகளை அள்ளி மூட்டைகளாக கட்டிக்கொண்டான். மூவரும் ராஜாவிடம் சென்றனர். பின்னர் ராஜா தம் மூன்று மகன்களிடமும் நான் சொன்ன ஏழைகள் வேறு யாரும் இல்லை... நீங்கள்தான். நீங்கள் கொண்டு வந்ததை இரண்டு வாரங்களுக்கு நீங்கள் சாப்பிடுங்கள் என்று கூறினார். நல்ல பழங்களை கொண்டு வந்தவன் அதை சாப்பிட்டு அரசன் ஆனான். நீதி: பிறருக்கு நல்ல நினைத்தால் நமக்கும் நல்லதே நடக்கும்.

மந்திர வார்த்தை..! (The magic word..!)

Image
ஒரு ஊரில் நண்பர்களான இரண்டு இளைஞர்கள் ஒருநாள் வெளியூர் ருக்குச் சென்றார்கள். போகும் வழியில் இரவு நேரம் நெருங்கிவிட்டதால் குளிரவும் தொடங்கி விட்டது. இருந்தாலும் இருவரும் பல விஷயங்களைப் பற்றி பேசியபடியே பயம் தெரியாமல் நடந்தார்கள். நேரம் நகர்ந்துகொண்டே போனதில், இரவும் வளர்ந்து நல்ல இருட்டியது. சரி, ஏதாவது ஒரு மரத்தில் ஏறி இரவைக் கழித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்தபோதுதான் அந்த பயங்கரம் நிகழ்ந்தது.  எதன்மீதோ தடுக்கி எப்படியோ உருண்டு அழமான கிணறு ஒன்றில் விழுந்துவிட்டார்கள் அவர்கள். இருவருக்கும் நீச்சல் தெரியும் என்பதாலும் நீரில் முழ்கவில்லை என்றாலும் மிக ஆழமான பாசிபடர்ந்த கிணறு என்பதாலும். இருட்டு என்பதாலும் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. கிணற்றில் விழுந்த நிலவின் பிம்பம் மட்டுமே துணையாக இருக்க இருவரும் விடியும்வரை கிணற்றுக்குள்ளேயே இருந்தார்கள். விடிந்ததும் வெளிச்சம் பரவ ஆரம்பித்ததும் அவர்களுக்கு இருந்த கொஞ்சம் நம்பிக்கையும் இருண்டுபோனது. காரணம், கிணறு அவர்கள் நினைத்ததைவிட மிக மிக ஆழமாக இருந்தது. அதை விட மோசமாக, அதில் இருந்து ஏறி வர எந்தப்பிடியோ படிகளோ எதுவும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால

இதுதான் வாழ்க்கை

Image
ஒருவர், வாழ்க்கையில் பல பிரச்சினைகள். வீட்டில் பிரச்சினை, தொழிலில் பிரச்சனை, என எங்குமே பிரச்சினைத்தான். ஆனால், அதற்காக ஒடிக் கொண்டு இருக்கிறேன்.  தீர்ந்தப்பாடிலில்லை, நிம்மதியான தூங்க முடியவில்லை என்று புலம்பிக் கொண்டு ஒரு துறவியை சந்தித்தார். அதைக்கேட்ட அந்த துறவி எனக்கு ஒரு தோட்டம் இருக்கிறது. அங்கே நிறைய ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகள் இருக்கின்றன. இன்று இரவு, நீ அங்கு சென்று அனைத்தையும் தூங்க  வைத்து விட்ட பிறகு, நீயும் அங்குள்ள தாங்கும் விடுதியில் ஒய்வு எடுத்துக் கொள் என்று அனுப்பி வைத்தார். மறுநாள் காலை, துறவியை  அந்த நபர் மிகுந்த களைப்புடன் சந்தித்து. 'அய்யா இரவு முழுவதும் தூக்கமே இல்லை என்றார். அதற்கு துறவி என்னாயிற்று என கேட்டார். இரவு முழுவதும் எல்லாத்தையும் தூங்க வைக்க முடியவில்லை. ஒன்று தூங்கினால் மற்ற ஒன்று எழுந்து விடுக்கிறது. ஏதையும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என் தூக்கம் போனதுதான் மிச்சம் என்றான். அதைக் கேட்ட துறவி சிரித்தப்படியே 'இதுதான் வாழ்க்கை' வாழ்க்கையில் பிரச்சினையை முடிப்பது என்பது ஆடு, மாடு, கோழிகளை தூங்க வைப்பது போன்றது... சில பிரச்சினைகள்