இயல்பாக இருத்தல்

.

இரண்டு ஜென் குருக்கள் நண்பர்களாக இருந்தனர். அவர்கள் மாலை நேரத்தில் காற்று வாங்குவதற்காக மெதுவாக நடந்து செல்வது வழக்கம்.

அன்றும் அப்படித்தான் அவர்கள் ஒய்வாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். ஆற்றின் ஒரமாக அவர்கள் நடந்துக் கொண்டிருந்த போது அவர்கள் கண்ணெதிரிலேயே ஒரு தேள் தவறிப்போய் ஆற்றில் விழுந்ததைப் பார்த்தார்கள்.

உடனே அவர்களில் ஒருவர் பதைபதைத்துப் போய் அதை வெளியில் எடுக்க முயற்சித்தார்.

அவரின் கையில் அது கடுமையாகக் கொட்டியது.
உடனே தவறிப்போய் மீண்டும் ஆற்றில் விழுந்தது.
அவர் மீண்டும் எடுக்க முயற்சித்தார்.

அது மீண்டும் கடுமையாகக் கொட்டியது.

மறுபடியும் தவறிப்போய் தண்ணீரில் விழுந்தது.
இந்தச் செயல் பலமுறை மீண்டும் மீண்டும் நடந்தது.

"அதுதான் உங்களை திரும்பத் திரும்பக் கொட்டுகிறதே. அதை ஏன் காப்பாற்றுகிறீர்கள்?"  என்றார் மற்றொரு குரு.

"கொட்டுவது அதன் இயல்பு, காப்பாற்றுவது என் இயல்பு. நான் எந்தச் சூழலிலும்  என் இயல்பை மாற்றிக் கொள்வதாக இல்லை" என்று கூறிய அவர் ஒரு கம்பைக் கொண்டு அந்தத் தேளைக் காப்பாற்றிக் கரையில் விட்டுவிட்டே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்.

மற்றொருவர் அன்றைய தினம் ஒரு பாடம் கற்றுக் கொண்ட மகிழ்ச்சியுடன் அவரைப் பின் தொடர்ந்தார்.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்