நரியும் பூனையும்

நரி பூனையிடம் தற்பெருமை பேசிக் கொண்டது, " எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?"
எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும் என்றது பூனை.
அப்போது பெரிதாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் சப்தம் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சியில் ஏறிக் கொண்டது.

நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்த தந்திரத்தைப் பயன்படுத்துவது என்று யோசனையில் கால தாமதமாகி அவர்களிடம் மாட்டிக் கொண்டது.

நாம் பல நேரங்களில் இப்படித்தான் பணம் சம்பாதிப்பதற்கு ஆயிரம் வழி தெரிந்தாலும் அதில் ஒன்றிலும் முழு மனதுடன் இறங்காமல் பலவற்றிலும் கால் வைத்துத் தோல்விகளை ஏற்படுத்திக் கொள்வோம்.

ஆனால் எதுவும் தெரியாதவன் தனக்கு தெரிந்தவற்றில்  முழு மனத்துடன் ஈடுப்பட்டு மிகப்பெரிய செல்வந்தவர்களாக மாறிவிடுகின்றனர். இதுவே வெற்றிக்கான சரி பாதை ஆகும். 

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்