தவளையாக இருங்கள்ஜென் துறவி தனது சீடர்களுக்கு வழக்கம் போல் கதைெ செ சொல்லத் தொடங்கினார்.

ஒருமுறை தவளைகளுக்கிடையே போட்டி ஒன்று நடைபெற்றது. உயரமாக இருந்த குன்று ஒன்றின் உச்சியை யார் முதலில் அடைவது என்பதே போட்டி.

அனைத்துத் தவளைகளும் போட்டி ஆரம்பிக்கும்போது உற்சாகமாகத்தான் இருந்தன.

ஆனால் நேரம் செல்லச் செல்ல குன்றின் கால்வாசித் தூரத்தை அடையும்போதே பல தவளைகள் அதற்கு மேல் மேலே ஏற முடியாமல் தங்கள் முயற்சியைக் கைவிட்டன.

அவை கீழே விழுந்தவுடன் சும்மா இருக்கவில்லை. ஏறிக் கொண்டிருந்த தவளைகளைப் பார்த்து. "இதற்குமேல் ஏறுவது யாராலும் முடியாது. உச்சியை அடைவதையெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது" என்று சத்தமாகச் சொல்லிக்கொண்டே இருந்தன.

அவை சொல்வதைக் கேட்ட மற்ற தவளைகளும் மனம் சோர்ந்து அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாகக் கீழே விழுந்தன.

ஒரே ஒரு தவளை மட்டும் மேலே மேலே ஏறிக் கொண்டே இருந்தது.

அனைத்துத் தவளைகளும் ஒன்றுசேர " உன்னால் மேலே ஏற முடியாது கீழே வந்து விடு" என்று கத்தின.

ஒருவழியாக தான் நினைத்ததை அந்தத் தவனை சாதித்து விட்டது. உயரே சென்று வெற்றி பெற்று விட்டது.

அனைத்துத் தவளைகளுக்கும் ஒரே ஆச்சிரியம். வென்ற தவனை கீழே வந்தவுடன், "உன்னால் மட்டும் எப்படி சாதனை புரிய முடிந்தது?" என்று ஆவலுடன் கேட்டன.

அதற்கு அந்தத் தவளை "நீங்கள் எது பேசினாலும் கொஞ்சம் சத்தமாகப் பேசுங்கள். எனக்குக் காது கொஞ்சம் மந்தம்" என்றது.

குரு கூறிய கதையைக் கேட்ட சீடர்கள் அதன் உட்கருத்தைப் புரிந்து கொண்டனர்.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்