மனமே சொர்க்கம்ஒரு கிராமத்தில் இரண்டு சகோதரர்கள் வசித்து வந்தனர். அண்ணனிடம் 99 பசுக்கள் இருந்தன. தம்பியிடம் ஒரே ஒரு பசு இருந்தது.

இருந்த ஒரு பசுவில் பால் கறந்து வீட்டில் உள்ள அனைவரின் தேவைக்கு எடுத்தது போக மீதியிருந்த பாலை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு விற்று அதில் வரும் பணத்தை மற்ற தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வான்.

கொஞ்சமாக நிலமும் இருந்தது. அதில் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்தான். பயிர்கள் செழித்து வளர்ந்தன. அதைக் கொண்டு தன் வாழ்வை மிகவும் நிம்மதியாக, மிகவும் மகிழ்ச்சியாகக் கழித்து வந்தான்.

ஆனால் 99 பசுக்கள் வைத்திருந்த அண்ணனோ மகிழ்ச்சியாக இல்லை. இன்னும் ஒரே ஒரு பசு வாங்கி விட்டால் நூறு பசுவாகி விடும் என்ற நினைப்போடு அலைந்து திரிந்தான்.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்