ஒப்பிடாதேகுரு தனது நண்பருடன் ஆற்றங்கரையோரமாக நடந்துக் கொண்டிருந்தார். இருவரும் பல விஷயங்களைப் பற்றிப் பேசியப் படியே சென்றனர்.

குரு அழகழகாக ஆற்றில் நீந்திச் சென்ற மீன்களைப் பார்த்து. " இந்த மீன்கள் எவ்வளவு சந்தோஷமாக நீந்திக் செல்கின்றன" என்றார்.

அவரின் நண்பர், " நீங்கள் ஒரு மீன் கிடையாது. அப்படி இருக்கும்போது, அவை அனைத்தும் சந்தோஷமாகத்தான் நீந்திச் செல்கின்றன என்பதை எப்படி உங்களால் உறுதியாகக் கூற முடியும்?" என்று கேட்டார்.

உடனே அந்த குரு, " நீ ஒருபோதும் நானாக முடியாது. எனவே அந்த மீன்களின் சந்தோஷத்தை உன்னால் உணர முடியாது" என்றபடியே தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்