யானைக் கட்டுவேடன் ஒருவன் காட்டிற்குள் சென்று பெரிய குழிகளை வெட்டி வைப்பான். அந்த வழியாக வரும் யானைகளில் ஏதாவது ஒன்று அந்தக் குழிக்குள் தவறி விழுந்துவிடும்.

சில நாட்கள் அந்த குழியிலிருந்து வெளியில் வரத் தன்னால் முடிந்த அளவு போராடிப் பார்க்கும். பின்னர் சிறுது சிறிதாக தன்னுடைய நம்பிக்கையை இழக்க ஆரம்பிக்கும்.

பின்னர் அதனைத் தக்க பாதுகாப்போடு தன் இடத்திற்குக் கொண்டுவந்து மிகப்பெரிய இரும்புச் சங்கிலிகளைக் கொண்டு கட்டி வைப்பான்.

முடிந்தவரை சங்கிலிகளை அறுத்தெறிந்துவிட்டுத் தப்பித்து விடலாம் என்று யானை முயற்சி செய்யும்.

சில மாதங்கள் வரை அந்தப் போராட்டம் தொடரும். அதன்பிறகு அவன் அந்த யானைகளின் கால்களில் உள்ள சங்கிலிகளை அகற்றிவிட்டு சிறிய கயிறு கொண்டு கட்டி விடுவான்.

யானை நினைத்தால் அந்தக் கயிற்றை எளிதாக அறுத்து விட்டுத் தப்பித்துவிடலாம். ஆனால் யானை தப்பிக்க முயற்சி செய்யாது. ஏனென்றால் முன்னர் பலமான சங்கிலியால் கட்டப்பட்டிருந்த போது அவற்றை இழுத்து இழுததுக் கால்களில் காயம்பட்டதன் நினைவாகக் கயிற்றை இழுக்கச் சற்றும் முயற்சி செய்து பார்க்காது.

நாம் யானை போல் இருக்க கூடாது. முயற்சி செய்வதை எந்தச் சூழலிலும், எத்தகைய துன்பம் வந்தபோதிலும் நிறுத்திவிடக்கூடாது.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்