ஞானம்ஒரு இளைஞனுக்கு திடீரென்று சந்தேகம் வந்தது, ஞானம் என்றால் என்ன?

தன் முன்னால் வரும் அனைவரிடமும் அதே கேள்வியைக் கேட்கத் தொடங்கினான்.

ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகத் தங்கள் மனதில் தோன்றிய பதிலைச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் சொன்ன பதில் எதுவும் அவனுக்குத் திருப்தியளிக்கவில்லை.

துறவிகள், முனிவர்களிடம் சென்று கேட்டால் உனக்குப் பதில் கிடைக்கும் என்றார்கள் சிலர்.

அவனும் துறவிகள் பலரைச் சந்தித்துத் தன்னுடைய கேள்விக்கணையைத் தொடுத்தான்.

பல துறவிகள் ஒட்டமெடுத்தார்கள். வேறு சிலர் சொன்ன பதில் அவனுக்குப் புரியவில்லை.

கடைசியாக ஒரு ஜென் குருவைச் சந்தித்தான். அவர் ஒரு பாறையின் மீது அமர்ந்திருந்தார். அவரிடம் சென்ற அவன் வழக்கமான கேள்வியை எடுத்து விட்டான்.

அவர் நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் குனிந்து கொண்டார்.

அவன் மீண்டும் தன் கேள்வியைக் கோட்டான். அவர் எழுந்து நடக்கத் தொடங்கினார். அவன் விடாமல் அவர் பின்னால் சென்று அதே கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டான்.

வெகுதூரம் நடந்தபின் அவனுக்குச் சலிப்பு ஏற்ப்பட்டது.

ஒருவேளை இவருக்குத் தான் கேட்ட கேள்வி புரியவில்லையோ? என்று நினைத்து மீண்டும் ஒரு முறை தனது கேள்வியைக் கேட்டான்.

அப்போதும் அவரிடமிருந்து பதில் வரவில்லை. இனிமேல் இவரிடம் கேட்டுப் பிரயோஜனமில்லை என்று நினைத்துத் திரும்பி நடக்கத் தொடங்கும்போது ஜென் குரு அவனை அழைத்தார்.

" மற்றவர்களிடம் கேட்டுப் பயனில்லை என்று நினைத்துத் திரும்புகிறாய் அல்லவா? அதுதான் ஞானம்" என்று பதில் கூறிவிடுத்  தன் போக்கில் சொல்லத் தொடங்கினார்.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்