மெளனத்தைவிட சிறந்ததுஒரு மடாலயத்தில் பல ஜென் குருக்களும், பல சீடர்களும் வாழ்ந்து வந்தனர்.

அங்கே ஒரு வித்தியாசமான விதிமுறை நடைமுறையில் இருந்தது. மெளனத்தைவிடச் சிறப்பாகப் பேசமுடியுமென்றால் பேசவேண்டும் என்பதே அது.

வகுப்பறையில் குரு மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தார். மாணவர்கள் அவரை அமைதியாகப் பார்த்தபடியே இருந்தனர். அவரும் அமைதியாக மாணவர்களைப் பார்த்தார்.

நேரம் ஓடிக்கொண்டே இருந்தது.

அப்போது வகுப்பறையின் அருகில் இருந்த மரத்திலிருந்த பறவை ஒன்று கூவிய சத்தம் கேட்டது.

" அவ்வளவுதான் இன்றைக்குப் பாடம் முடிந்தது" என்று சொல்லிய குரு எழுந்து வெளியில் சென்றார்.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்