வெற்றி நமதே...!
துருக்கியின் அரசன் ஒரு நாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஒர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான். அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது.

யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக் கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்.  அரசன் காலையில் எழுந்து கொண்ட போது நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியைப் பார்த்து, " இது என்ன உனது இடது கையில் கயிறு?" என்று கேட்டான். தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது. குழந்தை அழுதால் இதை இழுப்பேன் என்றான்.

நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. " இந்தக் குச்சி எதற்கு?"  எனக் கேட்டான் அரசன். " வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காய்ப் போட்டிருக்கிறாள். இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன். இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது" என்றான்.

அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான். "இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்?" எனக் கேட்டான் அரசன். " வீட்டில் ஒரு எலி இருக்கிறது. அதன் தொல்லையை சமாளிக்க இந்த மணியை ஒலித்தால் போதும், ஒடிவிடும்!"  என்று பதில் சொன்னான்.

 அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது. நெசவாளியைப் பார்த்து "அவர்கள் என்ன செய்கிறார்கள்?" என்று கேட்டான். "நூற்பு வேலை செய்து கொண்டிருக்கும் போது வாய் சும்மா தானே இருக்கிறது.

அதனால்,  அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன். அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்!" என்றான். " அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்? உள்ளே வரலாம் தானே எனக் கேட்டான் அரசன்.

அதற்கு நெசவாளி சென்னான், " அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களை கேட்கப் போகிறது. ஆகவே, அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன்.

என்னிடம் பாடம் கேட்கும்போது அவர்கள் காலால் சேற்றை குழைத்துக் கொண்டிருப்பார்கள்" என்றான். ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்ய முடியுமா என அரசனுக்கு வியப்பு தாங்க முடியவில்லை.

நெசவாளி சொன்னான், "இது மட்டுமில்லை என் மனைவி கிரேக்கத்துப் பெண். ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களை சிலேட்டில் எழுதிவைத்துப் போகிறாள். வேலை செய்துக் கொண்டே அதையும் கற்று வருகிறேன்".

ஒருவன் விரும்பினால் ஒரே நேரத்தில் கற்றுக் கொள்ளவும், கற்றுத்தரவும், வேலை செய்யவும், வீட்டை கவனிக்கவும் முடியும் என்பதற்கு இந்த நெசவாளி தான் சாட்சி.

நமது சோம்பேறித்தனத்துக்கு காரணம் கற்ப்பித்துக் கொண்டிராமல் தொடர்ச்சியான உழைப்பினைத் தந்து தோல்விகளைத் தூரத்துவோம். வெற்றி நமதே...!!

The king of Turkey went hunting one day. On the way he stayed one night at the house of a weaver on the way. They did not know that it was the king who came and stayed at his house.

 Thinking that some hunter had come, they provided accommodation. When the king got up in the morning, the weaver had started spinning. A rope was tied to his left hand. The king looked at the weaver and asked, "What is this rope in your left hand?" He asked. For rocking a baby in a cradle. He said he will pull this if the child cries.

 A long stick was beside him as the weaver spun the thread. "What is this stick for?" asked the king. He said, "My wife is drying grains in the sun. I have tied a black flag on the other end of this stick. If you shake it, the birds will not come near."

 The weaver had beads tied around his waist. "What have you tied this bell for?" asked the king. "There is a mouse in the house. Ring this bell and it will go off!" He replied.

  Outside the window of his house, the faces of the four-and-a-half-year-olds were visible. Look at the weaver and ask, "What are they doing?" He asked. "The mouth is idle while the spinning wheel is working.
So, I teach them what I know. They will listen from outside!" He said. "Why are they outside? The king asked if he could come in.


 The weaver said, "Their ears are going to listen to the lessons I conduct. So I have made them wash the soil in front of my house.


 "When they ask me for a lesson, they are washing their feet in the mud," he said.


 The weaver said, "Not only this, but my wife is a Greek woman. Every day she writes down ten Greek words on a syllabary. I am learning them as I work."


 This weaver is a testament to the fact that one can learn, teach, work and take care of the home at the same time if one wants to.


 Instead of blaming it on our laziness, let's keep working hard and avoid failures. Victory is ours...!!

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்