அசிங்க வாத்துக்குஞ்சு (The ugly duckling)

ஒரு விவசாயிக்கு ஒரு வாத்து இருந்தது. அது பத்து முட்டைகளை இட்டது. விரைவில், அவை அனைத்தும் குஞ்சுபொரித்தன.

 பத்தில் ஒன்பது வாத்து குஞ்சுகள் அம்மாவைப் போல் இருந்தன.

 பத்தாவது பெரியதாகவும், சாம்பல் நிறத்துடன் அசிங்கமாக இருந்தது. மற்ற வாத்துக்கள் அனைத்தும் அந்த அசிங்க வாத்தை கேலி செய்தன.

இப்படியே நாட்கள் நகர்ந்தன, வாத்து குஞ்சுங்களும் வளர ஆரம்பித்தன. ஆனால், அந்த அசிங்க வாத்தில் உள்ள அனைத்தும் இறகுகளும் உதிர தொடங்கின.

அதனால் அந்த வாத்து மனஉடைந்து, வெளியே எங்கும் செல்லாமல் இருந்தது. இதை வைத்து மற்ற வாத்துக்கள் ரெம்ப கேலிச் செய்தன. இதனால் தற்கொலைச் செய்துக் கொள்ள ஆற்றரங்கரைக்கு சென்றது.

ஆனால், அது ஆற்றில் தனது பிம்பத்தைப் பார்த்தது. அப்பொழுதுதான் அது வாத்துயில்லை ஒரு அன்னம் என்பதை உணர்ந்தது. அதைப் பார்த்த மற்ற வாத்துக்கள் தன் தவறை உணர்ந்தன.

நீதி: நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே அழகாக இருக்கிறாய்.Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்