பறவையின் மூன்று அறிவுரைகள்!!! (THREE ADVICE FROM THE BIRD!!!)

ஒரு மனிதன் பறவை ஒன்றை பிடித்து விடுகிறான். உடனே அந்த பறவை அவனிடம் என்னை விட்டுவிட்டால் உனக்கு வாழ்க்கைக்கு தேவையான மூன்று முக்கிய அறிவுரைகளை வழங்குகிறேன்.

இதன் மூலம் நீ மேன்மை அடைவாய். ஆனால் முதல் அறிவுரை நீ என்னை உன் கையிலிருந்து விட்டவுடன். இரண்டாவது அறிவுரை மரத்தில் மேல் அமர்ந்தவுடன். மூன்றாம் அறிவுரை நான் அங்கிருந்து பறக்கும் போது.

அதற்கு அவன் சரியென்று, தன் கையிலிருந்து அந்த பறவையை விட்டான்.

அறிவுரை ஒன்று, எப்பொழுதும் நீ உன் கடந்த கால இழப்புகளையும், தவறுகளையும் எண்ணி அவற்றை சுமையாக்கி உன் வாழ்க்கையை பாழ்படுத்தி கொள்ளாதே.

மரத்தின் மேல் அமர்ந்தப் பிறகு, இரண்டாம் அறிவுரை: யார் எதை சொன்னாலும் அப்படியே நம்பிவிடாதே உன் பகுத்தறிவுக் கொண்டு யோசித்துப்பார்.

இரண்டு அறிவுரைகளை கூறிய பிறகு, நண்பா என்னை விடுவித்து, பெரும் தவறுச் செய்து விட்டாய். என்னுடைய வயிற்றில் மிகப்பெரிய இரண்டு வைரங்கள் இருகின்றன. என்னை கொன்று அந்த வைரத்தை எடுத்து பயன் அடைந்து இருக்கலாம் என்றது.

அதற்கு அவன் சரி விட்டு விட்டேன் அது எனக்கு பெரிய இழப்பு தான், வருத்தம் தான் என்ன  செய்வது.

சரி மூன்றாவது அறிவுரையை கூறு என்றான், ஏற்கனவே கூறிய முதல் அறிவுரைப்படி கடந்தக் கால இழப்புகளையும், தவறுகளையும் எண்ணி நொந்துப் போகதே என்றேன்.  ஆனால்,  நீ அதைதான் செய்கிறாய். இரண்டாவது அறிவுரையில், யார் எதைச் சொன்னாலும் உன் பகுத்தறிவுக் கொண்டு யோசித்துப் பார் என்றேன்.

எவ்வளவு சின்னச் சிறிய பறவையாகிய என் உடலில் மிகப்பெரிய இரண்டு வைரங்கள் இருப்பதாக சொல்லிய என்னை நம்பிய உன் அறிவாளித்தானத்தை என்னெ செ சொல்வது.

மூன்றாவது அறிவுரை என்னவென்றால், உனக்கு எதை சொன்னாலும் இரண்டையும் பயன்படுத்தத் தெரியாத உனக்கு மூன்றாவது பயன்படாது என்று சொல்லி அந்த பறவை பறந்துச் சென்றது.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்