நரியும், ஆடும் (Fox and Goat)

ஒரு நாள் காட்டில் தனியாக நரி நடந்து செல்லும் போது ஒரு கிணற்றில் தவறி விழுந்தது.

நரி முயற்சிகள் பல செய்தும் வெளியே வர முடியாமல் தவித்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு ஆடு நரியைப் பார்த்து, ஏன் கிணற்றில் இருக்கிறாய் என கேட்டது.

அதற்கு தந்திரமான நரி சொன்னது, " ஒரு பெரிய வறட்சிக் காலம் வர போகிறது. அதனால் நான் முன்கூட்டியே இங்கு வந்து இருக்கிறேன்".

இதை நம்பி ஏமாறந்த ஆடு கிணற்றில் குதித்தது.

நரி இதுதான் சரியான வாய்ப்பு என வேகமாக ஆட்டின் மீது ஏறி அதன் கொம்புகளைப் பயன்படுத்தி கிணற்றில் இருந்து வெளியே தாவியது.

மேலே வந்த நரி உதவிய ஆட்டுக்கு உதவாமல் தன் வழியே சென்றது. ஆடு அப்பொழுது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தது.

நீதி: "கஷ்டத்தில் இருக்கும் ஒரு மனிதனின் ஆலோசனையை ஒருபோதும் நம்பாதே".


Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்