வெற்றுப்படகு (Empty Boat)ஒரு முறை, சிஷயன் ஒருவன் தன் துறவிடம் யார் எப்படி உங்களை அவமானப்படுத்தினாலும் கோபமே வராத இரகசியம் என்னவென்று கேட்டான்.

அதற்கு துறவி, ஒரு ஏரியில் படகில் அமர்ந்து தியானம் செய்வது என் வழக்கம். அப்படி ஒரு முறை தியானத்தில் இருந்தபோது நான் அமர்ந்திருந்த படகை யாரோ ஒருவர் வந்த முட்டுவதுப் போலிருந்தது.

 அது தியானத்தைத் தொடர்ந்து தொந்தரவு செய்தது.

ஒரு கட்டத்தில் என் தியானம் கலைந்தது. மேலும் அது என்னை கோபத்தை உண்டு பண்ணியது.

கண்களைத்திறந்துப் பார்த்தால் அது ஒரு வெற்றுப்படகு! காற்றுக்கு அசைந்து அசைந்து வந்து மோதியிருக்கிறது. என் கோபத்தினை அந்த வெற்றுப்படகிடம் காட்டி என்ன பயன்?

யாராவது என்னைக் கோபப்படுத்தும் போது இதுதான் என் நினைவுக்கு வரும். இதுவும் வெற்று படகு தான் என்று அமைதியாகி விடுவேன்!

நீதி: "நமக்கு ஞானம் எப்போது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் வரலாம்!"

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்