அன்பு எதையும் சுமக்கும்



துறவி ஒருவர் தனக்குத் தேவையான பொருட்களைத் தூக்கிக் கொண்டு மலை உச்சியை நோக்கி ஏறி கொண்டிருந்தார்.

அது செங்குத்தான மலை. எனவே, மேலே ஏற ஏற சுமை அதிகமாகி முச்சு வாங்கத் துவங்கியது அவருக்கு.

சற்று தூரம் முன்னால் போனதும், அங்கே ஒரு மலைவாழ் சிறுமி தனது மூன்று வயதுத் தம்பியைத் தூக்கிக் கொண்டு உற்சாகமாய்ப் பாடல் ஒன்றும் பாடிக் கொண்டு மிகச் சாதாரணமாக மலை உச்சி நோக்கிப் போவதைப் பார்த்தார்.

துறவிக்கோ ஆச்சர்யமான ஆச்சர்யம். அவர் சிறுமியைப் பார்த்துக் கேட்டார். என்னம்மா இவ்வளவு சிறிய பையைத் தூக்கிக் கொண்டே மலை ஏற என்னால் முடியவில்லையே...

உன்னால் எப்படியம்மா இவ்வளவு பெரியவனைத் தூக்கிக் கொண்டு ஏற முடிகிறது? அதற்கு அந்த சிறுமி பதில் சொன்னால். அய்யா...

நீங்கள் தூக்கிக் கொண்டிருப்பது ஒரு சுமையை... ஆனால், நான் தூக்கிக் கொண்டிருப்பதோ என் தம்பியை! துறவிக்குப் புரிந்தது...

அன்பு எதையும் கமக்கும்...

A monk was climbing towards the top of the mountain carrying his essentials.

 It is a steep hill. So, he started to feel burdened to climb up.

 When he went a little further, he saw a mountain girl carrying her three-year-old brother, singing a song excitedly and walking casually towards the top of the hill.

 A wonderful surprise for the monk. He asked looking at the girl. I can't climb a mountain carrying such a small bag...

 How do you manage to lift someone so big? If the girl answered that. Sir...

 You are carrying a load... but I am carrying my brother! The monk understood...

 Love conquers anything...

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்