நல்ல வாய்ப்புகள்ஒரு மனிதன் மலை உச்சியில் இருந்து தவறி விழுந்தபோது, தற்செயலாக பாறையின் விளிம்பில் நீட்டிக் கொண்டிருந்த ஒரு வேரைப் பிடித்துக் கொண்டான்.

பிடி தளர்த்ததால் பாதளம் போகும் அபாயம்! அவன் அதுவரை கடவுளை நம்பியதில்லை.

அப்போது கடவுளை நினைத்து, " கடவுளே, உன்னை நான் முழுமையாக நம்புகிறேன். நீ தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்று வேண்டினான்.

 அப்போது வானிலிருந்து ஒரு குரல்! " நீ என்னை நம்ப மாட்டாய்.. கடவுளே, என்னைக் கைவிட்டு விடாதே.

நிச்சியம் நம்புகிறேன். " எனக்கு நம்பிக்கை இல்லை" " கடவுளே,  நீ தான் காப்பாற்ற வேண்டும்" "சரி, உன்னைக் காப்பாாற்றுகிறேன்.

முதலில் நீ பிடித்திருக்கும் வேரை விட்டு விடு" "வேரை விட்டு விட்டால் கீழே விழுந்து இறந்து விடுவேனே?" அதன் பின் வானத்தில் குரல் எதுவும் கேட்கவில்லை.

நீதி: வாழ்க்கையிலும் இப்படி தான். நம்பிக்கைக்கு உரியவர்களை நம்பித்தான் ஆக வேண்டும். யாரையுமே நம்பா விட்டால் நமக்கு வரும் நல்ல வாய்ப்புகள் கை நழுவி போகும். 

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்