நரியின் அறிவுரைஒரு நான், ஒரு நரி அதன் வால் மரத்தின் இடுக்கில் சிக்கியது.

அது பயந்தது, வலியால்  அங்கும் இங்கும் துள்ளியது.

அது துள்ளியதில் வால் மட்டும் இடுக்கில்  சிக்கி துண்டு ஆனது.

இதனால் தன் வாலை இழந்தது. வால் இல்லாமல், மற்ற நரிகளையும், மற்ற விலங்குகளையும் சந்திக்க கூச்சப்பட்டது.

மற்றவைகள் நம்மை கேலிச் செய்யும் என்று அச்சம் அடைந்த நரி ஒரு யோசனை செய்தது.

நரி ஒரு விருந்து ஏற்பாடு செய்து அனைத்து மிருகங்களை அழைத்தது. அதில் வாலின் நன்மை தீமைங்களைப் பற்றி கூறியது. அதனால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைத்தது.

ஆகவே இந்த பயனற்ற வால் நமக்கு தேவையில்லை என கூறியது. அதை வெட்ட வேண்டும் என்று கூறியது.


அதற்கு மற்ற விலங்குகள், " உன்னுடைய வாலை நீ இழக்கவில்லையென்றால், எங்களுடைய அழகான வால்களை அகற்றும் படி நீ எங்களை கேட்பாய் என்று நாங்கள் நினைக்கவில்லை".

நீதி: உங்களைத் தன் நிலைக்குத் தாழ்த்த முயல்பவரின் அறிவுரைகளைக் கேட்காதீர்கள்.Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்