நிருபரின் கேள்விஒரு மாபெரும் தொழில் அதிபர் ஒரு நாள் விமானத்தில் பயணம் செய்தார். அவர் அருகில் ஒரு பத்திரிக்கை நிருபர் அமர்திருந்தார்.

 அந்த வயதான தொழில் அதிபரிடம் பலவிதமான கேள்விகளை கேட்டுக் கொண்டு வந்தார் அந்த நிருபர்.

பல கேள்விகள்  கேட்ட அவர் இறுதியாக நீங்கள் இவ்வளவு வயதிலும் என் இன்ன இன்னும் உழைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஒய்வு எடுத்துக் கொள்ளாலாமே என்றார்.

அதற்கு தொழிலதிபர் இந்த விமான சுமார் எவ்வளவு அடி உயரம் பறந்துக் கொண்டிருக்கும்.

நிருபர் சுமார் ஆயிரம் அடி அல்லது அதற்கு மேல் என்றார்.

தொழிலதிபர்  சொன்னார், அப்படியே விமான ஓட்டுநர் அதை விட்டு விட்டால் என்ன ஆகும்.
நிருபர் அவ்வளவு தான் இதில் அனைவரும் இறக்க நேரிடும்.

அதைப் போலதான் என்னுடைய  உழைப்பை நான் நிறுத்தி விட்டால் என்னையும், என் தொழிலையும் நம்பி இருக்கும் மற்றவர்களின் கதி அவ்வளவு தான் என்றார் அந்த தொழில் அதிபர்..

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்