இராணியின் வித்தியாசமான அறிவிப்புஒரு நாட்டில் ஒரு இராணி ஆட்சிச் செய்துக் கொண்டிருந்தாள். ஒரு நாள், அவள் தன் மக்களுக்கு ஒரு வித்தியாசமான அறிவிப்பு செய்கிறாள்.

அறிவிப்பு என்னவென்றால் " ஒரு பெண் தன் ஆழ் மனதில் என்ன நினைகிறாள் என்பதை கண்டு பிடிக்க வேண்டும்".

அதில் ஒரு இளைஞன் ஆர்வம் கொண்டு பல அறிஞர்களையும், மகான்களையும் சந்திக்கிறான். அவர்களின் பதில் அவனுக்கு திருப்தி அளிக்கவில்லை. இறுதியாக ஒர் சூனியக்காரா கிழவியை சந்திக்கிறான். அவளிடம் அந்தக் கேள்வியை கேட்டு பதில் கூறுமாறுக் கேட்கிறான்.

அதற்கு அந்த சூனியக்காரி பதில் சொன்னால் எனக்கு என்ன தருவாய் என்று கேட்கிறாள். அதற்கு அவன் நீ என்ன கேட்கிறாயோ அதை நான் தருகிறேன் என்று வாக்குறுதி அளிக்கிறான்.

"ஒவ்வொரு பெண்ணும் தன் ஆழ்மனதில் அவர் சம்பந்தப்பட்ட முடிவை அவளே எடுக்க வேண்டும் என்று நினைப்பாள்" என்று அந்த சூனியக்காரா கிழவி சொன்னாள்.

இதைப் போய் இராணியிடம் கூறிகிறான். இராணியும் அந்த பதிலில் திருப்தி அடைகிறாள்.
உடனே அவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு அளிக்கிறாள். அதை எடுத்துக் கொண்டு அந்த சூனியக்காரா கிழவியிடம் செல்கிறான். அவளை சந்தித்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறான்.

அதற்கு அவள் என்னை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்கிறாள். அதற்கு அவன் உன்னை திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று வாக்குறுதி கொடுக்கிறான்.

அதைப்போல் மறுநாள் அவளை திருமணம் .செய்துக் கொள்ள அங்கு வருகிறான்.

அங்கு ஒர் அழகான தேவதைப் போல் பெண் இருக்கிறாள். அப்பொழுது அவள் அந்த இளைஞனைப் பார்த்து 'நான் உன்னோடு இருக்குப்பொழுது தேவதையாக அல்லது சூனியக்காரியாக இருக்க வேண்டுமா? அல்லது வெளியே இருக்கும் பொழுது தேவதையாக அல்லது சூனியக்காரியாக இருக்க வேண்டுமா? என்று நீயே கூறு என்றாள்.

அதற்கு அந்த இளைஞன் " ஒரு பெண் அவளுக்கு உண்டான முடிவை அவளே எடுப்பது நல்லது". ஆதலால் இந்த முடிவை உன்னிடம் விட்டு விடுகிறேன் என்றான். எப்பொழுது இந்த முடிவை என்னிடம் கொடுத்தயோ? நான் எப்பொழுது தேவதையாக இருப்பேன் என்று கூறினாள்.

பிறகு இருவரும் திருமணம் செய்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

நீதி: ஒருவர் தான் என்ன ஆக வேண்டும் என்பதை அவர்கள் முடிவில் விட்டு விடுவதே சாலச் சிறந்தது.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்