கழுகின் நன்றியுணர்வுவேடன் ஒருவன் விரித்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக்கொண்டது. அதைப் பிடித்த வேடன், சிறகுகளை மட்டும்  வெட்டி  சங்கிலியால் கட்டிப்  போட்டிருந்தான்.

அவ்வழியே சென்றெ பெபெரியவர் ஒருவர், அதன் மீது இரக்கம் கொண்டார்.  வேடனிடம் காசுெ கெகொடுத்து அந்தக் கழுகை விலைக்கு வாங்கி, தன் வீட்டிற்குக் கொண்டு சென்று நல்லமுறையில் வளர்த்து வந்தார்.

இறக்கைகள் மீண்டும் நல்லமுறையில் வளர்ந்தும். அதைப்பறந்துபோக அனுமதித்தார். கழுகு பறந்து செல்லும் போது, அதன் பார்வையில் ஒரு முயல் தென்பட்டது. அதை அப்படியே தூக்கி வந்து தன்னை வளர்த்த பெரியவரிடம்  அன்பள அன்பளிப்பாகக் கொடுத்தது.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த நரி, 'ஏற்கனவே உன்னைப் பிடித்தே வேடன் மறுபடியும் பிடிக்கலாம். இந்த முயலை நீ அவனிடம் கொடுத்திருந்தால், மறுபடியும் அவன் உன்னைப் பிடிக்காமல் இருப்பான். பெரியவருக்கு நீ முயலைக் கொடுத்தாலும், கொடுக்காமல் இருந்தாலும் அவர் உன்னைப் பிடிக்க வரப்போவதில்லை. எதற்காக அப்படிச் செய்தாய்' என கழுகைப் பார்த்துக் கேட்டது.

" அது தவறு. வேடனிடம் நான் முயலைக் கொடுத்தாலும், பிற்காலத்தில் அவன் என்னை வலைவிரித்துப் பிடிக்கலாம். ஆனால், நான் ஆபத்தில் இருந்தபோது என்னைப் பெரியவர் காப்பாற்றியுள்ளார். அவரிடம் நான் கொண்டுள்ள நன்றியையும், விசுவாத்தையும் வெளிப்படுத்தவே முயலை அன்பளிப்பாக செலுத்தினேன். உதவி செய்தவரிடம் நன்றியோடு இருப்பது தான் பண்புள்ள செயல்" எனப் பதில் கூறியது கழுகு.

நீதி: ஆபத்துக் காலங்களில் உதவி செய்தவர்களை மறக்காமல் நன்றியோடு இருப்பதுதான் நல்லவர்களுக்கு அழகு. 

A vulture got caught in a net spread by a hawker. Catching it, Vedan cut off only the wings and chained it.

 A great man passing by took pity on it. He bought the vulture by giving money to Vedan, took it to his home and reared it properly.

 The wings will regrow properly. He let it fly. As the eagle was flying, it caught sight of a rabbit. He picked it up and gave it as a gift to the elder who raised him.

 The fox, who was observing this, said, 'Vedan has already caught you and can catch you again. If you give him this rabbit, he will not like you again. Whether you give the rabbit to the elder or not, he will not come to catch you. "Why did you do that?" he asked looking at the eagle.

 "That's wrong. Even if I give the rabbit to Vaden, he might catch me later. But the elder saved me when I was in danger. I gave the rabbit as a gift to show my gratitude and faith to him. Being grateful to someone who helped me is a noble act," replied the eagle.

 Neeti: The beauty of good people is not forgetting those who helped them in times of danger and being grateful.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்