இதுதான் வாழ்க்கைஒருவர், வாழ்க்கையில் பல பிரச்சினைகள். வீட்டில் பிரச்சினை, தொழிலில் பிரச்சனை, என எங்குமே பிரச்சினைத்தான். ஆனால், அதற்காக ஒடிக் கொண்டு இருக்கிறேன்.

 தீர்ந்தப்பாடிலில்லை, நிம்மதியான தூங்க முடியவில்லை என்று புலம்பிக் கொண்டு ஒரு துறவியை சந்தித்தார்.

அதைக்கேட்ட அந்த துறவி எனக்கு ஒரு தோட்டம் இருக்கிறது. அங்கே நிறைய ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகள் இருக்கின்றன.

இன்று இரவு, நீ அங்கு சென்று அனைத்தையும் தூங்க  வைத்து விட்ட பிறகு, நீயும் அங்குள்ள தாங்கும் விடுதியில் ஒய்வு எடுத்துக் கொள் என்று அனுப்பி வைத்தார்.

மறுநாள் காலை, துறவியை  அந்த நபர் மிகுந்த களைப்புடன் சந்தித்து. 'அய்யா இரவு முழுவதும் தூக்கமே இல்லை என்றார். அதற்கு துறவி என்னாயிற்று என கேட்டார்.

இரவு முழுவதும் எல்லாத்தையும் தூங்க வைக்க முடியவில்லை. ஒன்று தூங்கினால் மற்ற ஒன்று எழுந்து விடுக்கிறது. ஏதையும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என் தூக்கம் போனதுதான் மிச்சம் என்றான்.

அதைக் கேட்ட துறவி சிரித்தப்படியே 'இதுதான் வாழ்க்கை' வாழ்க்கையில் பிரச்சினையை முடிப்பது என்பது ஆடு, மாடு, கோழிகளை தூங்க வைப்பது போன்றது... சில பிரச்சினைகள் தானாக முடிந்து விடும்... சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்துவிடலாம்...

 ஆனால் சில பிரச்சினைகள் முடிந்தால் வேறு பிரச்சனைகள் ஏழலாம்... அனைத்து பிரச்சனைகளும் முடிந்தால் தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகில் யாராலும் தூங்கவே முடியாது...

பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் கவலைப்பட்டு கொண்டே இருக்காதே.. தீர்க்க முடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை காலத்தின் கைகளில் ஒப்படைத்து விட்டு உனக்கான ஒய்வறையில் நிம்மதியாக இருக்க கற்றுக் கொள் என்றார். துறவியை வணங்கிவிட்டு சென்றவன்.

சில நாள் கழித்து வந்து துறவியிடம் " சில ஆடுகள், சில மாடுகள், சில கோழிகள் தூங்கவில்லை என்றாலும் நான் நிம்மிதியாக படுத்துத் தூங்கிறேன் என்றான்.

வாழ்வில் பிரச்சனைகள் என்பது ஒரு தோட்டத்தில் ஆடு, மாடுகளை ஒன்றாக தூங்க வைப்பது  போன்றது. அனைத்தும் ஒரே நேரத்தில் தூங்குவதற்கான வாய்ப்பு குறைவே...

ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் உள்ளது... அப்படியே நமக்கன பிரச்சனைகள் தீர்வதற்கான காலமும் உள்ளது. ஆகவே சிலவற்றை காலத்தின் காங்களில் ஒப்படைத்துவிட்டு, வாழ்வை அமைதியாக அனுப்விப்போம்..

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்