நல்லது, கெட்டது!



ஒரு நாள், சீடன் ஒருவன் தன் குருவிடம் கேட்டான், " நல்லதைப் படைத்த இறைவன்  தானே கெட்டதையும் படைத்துள்ளான்.

 அதனால் நல்லதை மட்டும் ஏற்பதுப் போல் கெட்டதையும் ஏற்றால் என்ன?" அதற்கு குரு சிரித்துக் கொண்டே, அது அவரவர் விருப்பம், என்றார்.

அப்போது பகல் உணவு வேலை வந்தது. அந்த சீடன் தனக்கு அளிக்கப்பட்ட உணவை பார்த்து அதிர்ந்து போனான்.

ஒரு கிண்ணத்தில் பாலும் மறு கிண்ணத்தில் பசு மாட்டு சாணமும் வைக்கப்பட்டு அவனிடம் உண்ண கொடுக்கப்பட்டது.

சீடன் விழித்தான். குரு புன்முறுவலுடன் அவனிடம் சொன்னார். பால் சாணம் இரண்டுமே பசு மாட்டிடம் இருந்து தானே வருகிறது.

பாலை ஏற்றுக் கொள்ளும் போது சாணியை ஏற்றுக் கொள்ளக் கூடாதா? என கேட்டார்.

சீடன் பதில் ஏதும் கூற முடியாமல் விழித்தான். குரு தொடர்ந்தார் பால் போன்ற நல்லவை நாம் மகிழ்வாய் வாழ. அதனை அப்படியே ஏற்கலாம்.

 சாணியை விலக்கி மண்ணில் புதைத்து உரமாக்குவது போல் தீயவைகளை விலக்கி புதைத்து உரமாக்குவது போல் தீயவைகளை விலக்கி புதைத்து அது தரும் பாடத்தை வாழ்விற்கு உரமாக்கி உயரும் வல்லமை கற்க வேண்டும் என்றார்.

One day, a disciple asked his Guru, "The Lord who created good has also created evil.

  So what if we accept only the good as well as the bad?" The Guru smiled and said, "It is your choice.

 Then came the lunch job. The disciple was shocked to see the food served to him.

 Milk was placed in one bowl and cow dung in the other and given to him to eat.

 The disciple woke up. The Guru told him with a smile. Both milk and dung come from cows themselves.

 Shouldn't we accept shani when we accept milk? he asked.

 The disciple woke up unable to answer. The Guru continued that good things like milk are for us to live happily. Accept it as it is.

  He said that just like removing the dirt and burying it in the soil and composting it, just as removing the evil things and burying it as fertilizer, we should learn the power to grow by removing the evil things and burying the lessons it gives for life.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்