முழுமையான ஈடுபாடுஒரு மரத்தடியில் ஒரு துறவி ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.

அப்போது ஒருவர் பரபரப்பாக அந்த மரத்தை ஒட்டிய பாதையில் ஓடி வந்தார்.

அங்கே இருந்த காய்ந்த சருகுகளின் மேல் அவர் வேகமாக ஓடியதால் எழுந்த சத்தமும், அவரது குரலும் துறவியின் தியானத்தை கலைத்தது.

அதனால் துறவியின் தியானம் கலைந்ததால் கோபம் அடைந்தார். மேலும் ஓடிய மனிதர் துறவியை கவனிக்காமல், அவரை தாண்டி போய்விட்டார்.

துறவிக்கு  கோபம் அதிகம் ஆகியது. மறுபடியும் இந்த வழியாகத்தானே வருவான். வரட்டும் பார்ப்போம் என காத்திருந்தார். சிறிது நேரம் கழித்து ஒரு சிறுவனை தன் தோளில் சுமந்துக் கொண்டு அந்த மனிதர் வந்தார்.

அவரை வழிமறித்த துறவி, " உனக்கு பொறுமை இல்லையா? நான் தியானத்தில் இருந்ததை கவனிக்கலையா? சத்தம் போட்டு என் தியானத்தை கலைத்து விட்டாயே? ' என கோபத்துடன் கேட்டார் துறவி.

அந்த மனிதர் பயந்து பணிவுடன் துறவியைக் கும்பிட்டு, 'என்னை மன்னித்து விடுங்கள் தாங்கள் அமர்ந்து இருந்ததை கவனிக்கவில்லை' என்றார்.

துறவி சமாதானம் ஆகவில்லை, 'என்ன? உனக்கு கண் தெரியாதா? என்று தனது சுயத்தை இழந்து கத்தினார்.

ஆனால், அந்த மனிதர் நிதானமாக " இல்லை சுவாமி என் மகன் மாலையில் தன் நண்பர்களுடன் விளையாட இந்தப் பக்கம் வந்தான்.

மற்றவர்கள் எல்லோரும் திரும்பி விட்டனர். என் மகன் மட்டும் வரவில்லை. ஏதாவது நடந்து இருக்குமோ அல்லது கொடிய விலங்குகளிடம் மாட்டியிருப்பானோ என்ற பயத்தில் அவனைத் தேடி ஓடினேன். என் மகன் நினைப்பில் இருந்ததால் உங்களை கவனிக்கவில்லை என்றார்.

இருந்துமும் துறவி விடவில்லை என்ன காரணம் சொன்னாலும் என்னால் ஏற்க முடியாது. இறைவனை நினைத்து தியானம் செய்து கொண்டு இருந்த எனக்கு நீ பெரிய  தொல்லை கொடுத்தது தவறு என்றார்.

அந்த மனிதர் துறவியிடம் ஒரு கேள்வி 
கேட்டார்.

'தியானத்தில் மூழ்கிருந்த உங்களுக்கு நான் ஒடியது கத்தியது தெரிந்தது.

அதனால் உங்கள் தியானமும் கலைந்தது.

ஆனால், மகனைத் தேடி ஓடிய நான் என் கண்முன்னே இருந்த உங்களை கவனிக்கலையே? என் நினைப்பெல்லாம் மகன் மீது மட்டுமே இருந்தததால் வேறு எதுவுமே தெரியலை.

சாதாரண சத்தங்களே உங்கள் தியானத்தை கலைத்து விட்டது என்றால் உங்கள் நினைப்பு இறைவன் மீது இல்லையே.

இது என்ன தியானம்? ஈடுபாடு இல்லாத இந்த தியானத்தால் என்ன பலன்?

துறவிக்கு தன் தவறு உறைந்தது, அந்த மனிதரிடம் மன்னிப்பு கேட்டார்.

நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் முழுமையான ஈடுபாடு காட்டவேண்டும். 

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்