ஓட்டைப் பானை



ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான முங்கிலில் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, முங்கிலைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை  இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும், கேலியும் செய்துள் கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேபி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

" ஐயா! என் குறையை நினைத்து நான் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்".

அதற்கு விவசாயி, " பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும்.

 அதனால்தான்  வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன.

அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்று பணம் சம்பாதிக்கிறேன்.

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது.

நீதி: அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.

A poor farmer lived in a village. He used to fetch water from the river daily for his household needs.

 He had two pots to fetch water. The pots are hung from both ends on a long rope and carried on the shoulder.

 One of the two pots had a small hole in it. So every day when you come home, there is only half of the water in the empty pot.

 Proud of his skill for a flawless pot. Looking at a flawed pot, it always teases and mocks its flaw.

 Two years passed like this. KP couldn't handle the pot and asked its master to follow.

"Sir! I feel bad thinking about my shortcoming. Every day because of my shortcoming, your work load is increasing.

 And the farmer said, "Pot! Did you notice something? Did you notice the row of beautiful flowers on your side on the path we were coming? I already knew that water was pouring from you.

  That's why I planted flower plant seeds along the way. Today they are growing big in the water you poured daily and giving me beautiful flowers every day.

 I decorate the house with them. I earn money by selling the remaining flowers.

 On hearing this, Pai stopped feeling disgusted. The next person started to do his work with opinion without bothering about the speech.

 Justice: If the other person is concerned about speech, we cannot do any work.


Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்