குட்டி முயல் மற்றும் வேட்டைநாய்

ஒருநாள், காட்டுப் பகுதியில் ஒரு முயல் குட்டி உலாத்திக் கொண்டு இருந்தது. அதைப் பார்த்த ஒரு வேட்டைநாய் அந்த முயல் குட்டியை துரத்தியது.

நீண்ட நேரம் துரத்தியும் அந்த  வேட்டைநாயால் முயலை பிடிக்க முடியவில்லை. சோர்ந்துப் போன வேட்டை நாய் வேட்டையை கைவிடுகிறது.

இதை பார்த்துக் கொண்டிருந்த ஆட்டுக் கூட்டம், அந்த வேட்டைநாயை விட முயல்க்குட்டி தான் பலமானது என்று கேலிச் செய்தது.

அதற்கு, வேட்டைநாய் சொன்னது, " முயல் அதன் உயிரைக் காப்பற்றிக் கொள்ள ஒடியது, நான் என் உணவக்காக மட்டுமே ஒடினேன். அதுதான் எங்களுக்கிடையிலான வித்தியாசம்".

நீதி: ஊக்குவிப்பு செயலைத் தூண்டுகிறது.Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்