எறும்பும், வெட்டுக்கிளியும் (Ant and grasshopper)

அது ஒரு வசந்த காலம், வெட்டுக்கிளி ஆனந்தமாக ஆடிப்பாடி திரிந்தது. ஆனால், 'எறும்பு தன் எதிர்கால உணவுத்  தேவைக்காக உணவை சேமிக்கத் தொடங்கின.

இதைப் பார்த்த வெட்டுக்கிளி எறும்பிடம் உணவுத் தேவைக்கு என்ன அவசியம் இப்பதான் வசந்த காலம் ஆயிற்றே என்றது.
அதற்கு எறும்பு நான் வரவிருக்கும் வறட்சி காலத்திற்காக தயாராகி வருகிறேன் என்று சொன்னது.

"அதை வெட்டுக்கிளி அலட்சியம் செய்தது".
சிறிது காலத்திற்கு பிறகு, வறட்சிக்காலம் ஆரம்பம் ஆனது. உணவு பற்றாகுறை அதிகமானது. வெட்டுக்கிளிக்கும் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டது.

அதே நேரத்தில் எறும்புகள் தாங்கள் சேமித்து  வைத்த  உணவுகளைக் கொண்டு சந்தோஷம் அடைந்தன.

நீதி:  "எதிர்கால சேமிப்பு மிக முக்கியம்".

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்