உண்மை என்றால் என்ன?(What is truth?)
ஒரு சீடன் தன் குருவிடம், உண்மை என்றால் என்ன? என்று கேட்டான். அதற்கு குரு சிறிது நாள் கழித்து சொல்கிறேன் என்றார்.

அதன் பின் அந்த சீடன் அதே கேள்வியை விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தான்.

குருவும் அவன் கேட்டும்போதேல்லாம் சிறிது நாள் கழித்து சொல்லுகிறேன் என்று பதில் அளித்துக்கொண்டே இருந்தார்.

அந்த சீடன் நம்பிக்கையுடன் முப்பது ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்தான். ஒரு நாள் குரு மரணப்படுகைக்கு போனார். அப்பொழுதும் சீடன் விடாமல் அந்த கேள்வியை கேட்டான்.

குரு புன்னகையை பதிலாக அளித்துவிட்டு இறந்துவிட்டார். சீடனுக்கு அந்த காணமே ஞானம் வந்தது.

இருந்தாலும் இந்தப்புன்னகையை முப்பது ஆண்டுகளுக்கு முன் பூத்திருக்க வேண்டியது தானே என்று அவன் கேட்கத் தவறவில்லை.
Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்