புதையல் (Treasure )

ஒரு ஊரில் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்கு மூன்று பையன்கள் அவர்கள் பொறுப்பில்லாமல் இருப்பதைக் கண்டு கவலையடைந்தார். தன் மூப்பின் காரணமாக தன் சொத்துகளை சரி சமம்மாக பிரித்துக் கொடுத்தார். அதில் ஒரு நிலத்தில் ஒரு அடி ஆழத்தில் புதையல் இருப்பதாக கூறி இறந்து விட்டார்.

அது எந்த இடம் என்று குறிப்பிடாமல் இறந்தால் அவர்களில் மூத்தவர், ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினான். ஏதுவும் கிடைக்க வில்லை. பின்பு இரண்டாம் மகன் அப்பா இரண்டு அடிக்கு ஒர் அடினு சொல்லியிருப்பார் என்று அப்பொழுதும் எதுவும் தென்படவில்லை.

இளையவன் கடைசியாக ஒரு முறை முயற்சிப்போம் என்று இரண்டு அடியை மூன்று அடியாக தோண்டினான். கடைசியில் ஏமாற்றமே!
அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் சரி தோண்டியது வீணாக
வேண்டாம் என்று எண்ணி அந்த நிலத்தில் விதையை விதைத்தார்கள்.

நீர் பாய்ச்சினார்கள், உரம் போட்டார்கள் உழைப்பு வீண் போகுமா? இறுதியில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் கொள்ளை இலாபம்.

இப்படி உழைப்பால் வரும் பலனை தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டு இருப்பார் என்று மூவரும் புரிந்துக்கொண்டார்கள்.Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்