மாணவனின் கோபம் (Student's anger)



ஒரு குருக் குலத்தில் மாணவன் ஒருவன் கல்விக் கற்றகச் சென்றான். ஆனால், ஒரே நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்லித்தந்த குருவின் மேல் அந்த  மாணவனுக்கு கோபம் வந்தது. தன் நேரம் வீண் ஆவதை நினைத்து வருந்தினான்.

இதை அறிந்த அந்த குரு, அந்த மாணவனுக்கு அதை புரிய வைக்க விரும்பினார்.

அவனை தன் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கு ஒரு கூண்டில் பத்து கோழிகள் அடைக்கப்பட்டு இருந்தன.

அதை திறந்துவிடச் சொன்னார். இப்பொழுது பத்துக் கோழிகளையும் பிடிக்க சொன்னார். ஆனால்,  பத்தும் பத்துத் திசையில் ஓடின.

அவைகளை பிடிக்கச் சிரமம் ப்பட்டு, கலைத்துப் போனான் அந்த மாணவன்.

இப்பொழுது குரு ஒரு கோழியின் காலில்  ஒரு வளையத்தை மாட்டி அதைக் கீழே விட்டார்.

அந்த மாணவனை அழைத்து இப்ப அந்தக் கோழியை மட்டும் பிடி என்றார். அவனும் அதை மிக எளிதாக பிடித்து விட்டான்.

குரு " அவனிடம் ஒரு நேரத்தில் ஒன்றை பின்பற்று..  பலவற்றை பிடிக்க நினைத்தால் எல்லாவற்றையும் இழப்பாய்" என்று கூறினார்.

நீதி: "நாம் வெற்றிடைய  குறிகோள் முக்கியம்".



Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்