சிறு துரும்பும் பல் குத்த உதவும் (A small rust tooth can help)ஒரு காட்டில் சிங்கராஜா ஒன்று நன்றாக சாப்பிட்டு ஒய்வு எடுத்துக் கொண்டு இருந்தது.

அப்பொழுது, இந்தப்பக்கம் வந்து ஒர் சுண்டெலி, சிங்கத்தை ஆச்சிரியதுடன் பார்த்தது. அது பார்ப்பதற்கு ஒரு மலை படுத்து இருப்பதுப்போல் இருந்தது.

உடனே அந்த எலி சிங்கத்தின் மேல் ஏறி விளையாட ஆரம்பித்தது.

நன்கு தூங்கிக்கொண்டு இருந்த சிங்கம் தன்மேல் ஏதோ ஊர்வதை அறிந்து விழித்தது, பார்த்தால் ஒரு எலி தன் மீது ஏறி விளையாடுவதை அறிந்து ஒரே பிடியில் அதை கவ்வியது.

எலி மிகவும் பயந்துடன், அரசே நான் செய்தது மிக தவறான செயல். என்னை மன்னித்து விட்டுவிடுங்கள் நிச்சியம் பயன் உள்ளதாக இருப்பேன் என்று கொஞ்சியது.

ஆனால், சிங்கம் அதைப்பார்த்து உனக்கு என்ன தைரியம். என் உடம்பு என்ன உனக்கு விளையாட்டுை மைதானமா என்று கர்ஜித்தது. இதில் எனக்கு வேறு உதவி செய்வேன் வேறு என்றது.

எலிக்கு உடல் எல்லாம் வியர்க்க ஆரம்பித்தது. உயிர் பயத்தில் இருந்தது.
பின்பு,  சிங்கம் எச்சரித்து எலியை விடுவித்தது.

ஒரு நாள், வழக்கம்போல் சிங்கம் இரைத் தேடி காட்டுக்குள் சென்றது. அப்பொழுது, ஒரு வேடன் விரித்த வலையில் சிங்கம் சிக்கியது.

சிங்கம் வலையில் இருந்து வெளிவர பல முயற்சிகளை செய்தது. சிங்கத்தால் இதுவும் இயவில்லை. பின்பு மிகவும் ஆவேசமாக கர்ஜித்தது. அதன் கர்ஜனை சத்ததை கேட்ட எலி அந்த திசையை நோக்கி சென்றது.

அங்கு சிங்கம் வலையில் சிக்கியதை பார்த்த எலி, தன் வாயால் வலையை கடித்து சிங்கத்தை விடுவித்தது. பெரும் தன்மையுடன் நடந்துக் கொண்ட எலிக்கு, சிங்கம் நன்றி கூறியது.

நீதி: "சிறுத்துரும்பும் பல் குத்த உதவும்".Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்