ஒரு அறிவாளியின் சவால் (A scholar's challenge)



அக்பரிடம் ஒரு அறிவாளி வந்து சவால் விட்டார்.  என்னிடம் ஒர் நல்ல வேலையால் இருக்கிறான். ஆனால், அவன் பெருந்தீனிக்காரன்!.

அவனை, ஒரு மாதம் வைத்திருந்து அவனுக்கு நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கொடுக்க வேண்டும். அவனுக்கு எந்த வேலையும், உட்பயற்சியும்  கொடுக்க கூடாது. ஆனால், ஒரு கிலோ கூட எடை கூடக் கூடாது என்றார்.

இதை கேட்ட அனைவரும் குனது அது எப்படி முடியும் என்றனர். அப்பொழுது, அக்பர் பீர்பாலை அழைத்து இந்த சவாலை நீ தான் வெற்றிகரமாக முடிக்கே வேவேண்டும் என்று கூறினார். பீர்பாலும் தங்கள் உத்தரவு அரசே என்று ஏற்றுக்கொண்டார்.

இந்த நபருக்கு மூன்று வேளை அந்த அறிவாளி கூறியதை விட நல்ல மகத்தான உணவு கொடுக்கப்பட்டது.

ஒரு மாதம் கழித்து வந்த அறிவாளியின் வேலையால் ஒரு கிலோ கூடவுமில்லை, குறையவுமில்லை இதைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

அக்பரும் வியந்து பீர்பாலிடம் கேட்டார். அதற்கு பீர்பால் நான் அவனுடைய இரவு படுக்கையை சிங்கத்தின் கூண்டு பக்கத்தில் அமைத்தேன்.

மேலும், அவனிடம் அந்த கூண்டின் கதவு சரியாக இல்லை என்று கூறினேன். அச்சம் காரணமாக அவன் சாப்பிட்ட உணவுகள் உடலில் ஒட்டவில்லை.

அந்த அச்சத்தால் அவனுக்கு எடை கூடவில்லை என்று பீர்பால் கூறினார்.
ஒருவருடைய அச்சமின்மையே அவரின் ஆரோக்கியம்.

நீதி: "ஒருவரின் மன ஆரோக்கியமே உண்மையான ஆரோக்கியம்".



Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்