செல்வந்தரும், பிச்சைக்காரனும் (The rich and the beggar)



அது ஒரு பனிக்காலம் என்பதால் மக்கள் வெளியே வர யோசணை செய்யும் மாலை நேரம். அந்த நேரத்தில் ஒரு பிச்சைக்காரன் ஒருவன் யாசகம் கேட்டு ஒரு செல்வந்தர் வீட்டு முன்பு வந்தார்.

அவர் அந்த ஊரில் மிகப்பெரிய செல்வந்தர், அவர் அந்த பிச்சைக்காரனை பார்த்து கடும் குளிர் காலமாக இருக்கிறது.

அதுவும் இந்த மாலை வேலையில் இவ்வளவு சாதரணமாக இருக்கிறாய், அதற்கு உண்டான உடைகூட இல்லையே என்று கேட்டார்.

அதற்கு அந்த பிச்சைக்காரன் எனக்கு இந்த குளிரிலிருந்து பழகிப் போச்சு இதனால் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றான்.

இதைக் கேட்டு வியந்த செல்வந்தர் நான் உனக்கு நிச்சியம் உதவி செய்யனும்.

 நீங்கள் இங்கயே காத்திருங்கள் என்னிடம் குளிர்க்கு இதமான உடைகள் நிறைய இருக்கு அதில் ஒன்றரை உங்களுக்கு தருகிறேன் என்று உள்ளே சென்றவர்.

சொந்த வேலையாக அவர்தான் சொன்னதை மறந்துவிட்டார்.  மறுநாள் காலையில் வழக்கம் போல் வெளியே செல்ல கதவையை திறந்தார்.

அங்கு அந்த பிச்சைக்காரன் இறந்துகிடந்தார். அதைக் கண்ட செல்வந்தர்க்கு அப்பொழுதுதான் அவர் கொடுத்த வாக்கு உறுதி ஞாபகம் வந்தது.

இவ்வளவு காலமாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னுடைய மனத்தையும், உடம்பையும் பழக்கப்படுத்திய மனிதர் அடுத்தவர்  கொடுத்த வாக்குறுதியை நம்பி தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.




Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்