ஆப்பு பிடுங்கிய குரங்கு (A monkey with a wedge)

ஊர் ஒன்றில் ஒரு கோயில் இருந்தது. கோயில் திருப்பணிக்காக மரங்களை அறுத்துக் கொண்டுவந்து போட்டிருந்தார்கள். அந்த மரங்களின் ஒன்றை இரண்டாக அறுத்துக் கொண்டிருந்த தச்சன், பாதி அறுத்த பின் அறுத்த இடத்திலே ஆப்புவையும் வைத்துவிட்டு, மீதியை அறுக்காமல் சென்றுவிட்டான்.

கோயிலையடுத்திருந்த காட்டுப்பகுதியிலில் நிறைய குரங்கள் இருந்தன. அந்த குரங்குகளில் சில, தாவி விளையாடிக்கொண்டே மரம் அறுத்துக்கிடந்த இடத்திற்கு வந்தது. அவற்றில் ஒரு குரங்கு பாதி பிளந்து கிடந்த மரத்தின் மேல் வந்து உட்கார்ந்தது.

அது சும்மாயிருக்காமல், அந்த மாப்பிளவில் வைத்திருந்த ஆப்பை அசைத்து அசைத்துப் பிடுங்கியது. ஆப்பை பிடுங்கியவுடன், மரம் இரண்டாக பிளந்தது. அதில் ஒரு மரம் குரங்கின் மேல் விழுந்தது. அவற்றில் மாட்டிக் கொண்ட அந்தக்குரங்கு உடல் நசுங்கி உயிர் விட்டது.

ஆகையால் தனக்குத் தொடர்பில்லாத ஒரு காரியத்தில் தலையிடக் கூடாது.



Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்