குரங்கும், மாங்கொட்டையும் (Monkey and Monago seed)குரங்கு ஒன்று மாமரத்தில் ஒரு மாம்பழத்தைப் பறித்து, சாப்பிட்டப்படி தன் இருப்பிடத்தை அடைந்தது.

சாப்பிட்டப் பிறகு மாங்கொட்டையை கீழேப் போட்ட போது அதற்கு ஒரு யோசனை தோன்றியது.

இந்த கொட்டையை மண்ணில் புதைத்து மரமாக வளரச் செய்தால். நாம் இஷ்டத்திற்கு பறித்துச் சாப்பிடலாம் வேறு எங்கும் நாம் செல்லத் தேவையில்லை என எண்ணியது.

மாங்கொட்டையை புதைத்து தண்ணீர் ஊற்றியது. ஆனால், குரங்கின் மனம் மாம்பழம் சாப்பிடுவதில் தான் இருந்தேத் தவிர மரத்தை வளர்ப்பதில் இல்லை.

மறுநாள் மாமரம் முளை விட்டுள்ளதா என ஆராய்ந்தது. மண்ணை தோண்டி மாங்கொட்டையை எடுத்தது.

கொட்டை இருப்பத்தைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டது. மீண்டும் அதை புதைத்து நீர் ஊற்றியது. தினமும் இப்படி எடுத்துப் பார்ப்பதும், புதைப்பதுமாக இருந்தன. இப்படி 
செய்தால் முடிவு என்ன ஆகும்? மாங்கெட்டை முளை விடவே இல்லை.

கோபம் கொண்ட குரங்கு, ஒருநாள் அந்த மாங்கொட்டையை காட்டுக்குள் வீசி எறிந்தது.

ஆசை நியாமானது என்றாலும் குரங்கின் அவசரம் நியாமற்றது. எல்லாவற்றிற்கும் காலம் அவசியம் தேவைப்படுகிறது. ஒரு செயலில் வெற்றி வேண்டுமானால் முயற்சியுடன், அதற்குரிய காலம் அவசியம்.

நீதி: "பொறுத்தார் பூமி ஆள்வார்".

Weight Loss and Increase Body Resistance 


Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்