குள்ளநரியும், இறைச்சித் துண்டும் (A jackal and a piece of meat)



ஒரு காட்டில் ஒரு குள்ளநரி ஒன்று இருந்தது. அது இரைத்தேடி வெகுதூரம் சென்றது.

 அதற்கு எதுவும் கிடைக்கவில்லை, ரெம்ப சோகமாக நடந்து வந்தக் கொண்டிருந்தது. அப்படி நடந்து வரும் பொழுது ஒரு இறைச்சித் துண்டு கிடைத்தது.

அதை எடுத்து வரும் பொழுது, ஒரு ஆற்றைக்கடக்க நேரிட்டது. அந்த ஆற்றை கடக்கும்பொழுது அதில் நிறைய மீன்களை இருப்பதைக் கண்டது.

அந்த மீன்களை பிடிப்பதற்காக, தான் கொண்டு வந்த இறைச்சித் துண்டை கரையில் வைத்து விட்டு ஆற்றில் குதித்தது. ஆனால் அதன் முயற்சி வெற்றியடையவில்லை.




திரும்பி கரைக்கு வந்த குள்ளநரிக்கு, ஏமாற்றம் தான் மிஞ்சியது. அந்த இறைச்சித் துண்டையும் ஒரு பருந்து கொத்திச் சென்றது.



Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்