நாயின் புத்திசாலித்தனம் (The intelligence of the dog)ஒரு நாய் கிராமத்தை விட்டு காட்டிற்கு வழிதவறி சென்றது. அங்கே ஒரு சிங்கம் பசியோடு அங்கும், இங்கும் அலைந்தைக் கண்டு மிகவும் பயந்துப் போய் ஒழிந்து நின்றது.

வெகு நேரம் ஆகியும் அந்த இடத்தை விட்டு போனாப்பாடுமில்லை.
நாம் எப்படியும் சிங்கத்திற்கு இரையாகி விடுவோம். ஆதலால் நாய் சிங்கத்திடம் இருந்து தப்பிக்க  ஒரு ஐடியா பண்ணியது.

அங்கு இருந்த எலும்புத் துண்டை எடுத்துக்கொண்டு சிங்கத்திற்கு கேக்கும் வீதமாக சத்தமாக ஆகா! என்ன அருமை சிங்கத்தின் மாமிசம் மிக மிக அருமை என்னொரு சிங்கம் கிடைத்தால் நம் பசி தீர்ந்து விடும் என்று கூறியது.

இதைக்கேட்ட சிங்கம் ஆகா எவ்வளவு பயங்கரமான மிருகமாக இருக்கு என்று கூறி அந்த இடத்தை விட்டு நடையை கட்டியது.

இதை கவனித்த ஒரு குரங்கு நடந்தை சிங்கத்திடம் கூற, சிங்கம் ஆவேசமாக கிளம்பியது. இதை அறிந்த நாய், சிங்கமும் குரங்கும் அருகில் வரும்  பொழுது, என்ன எவ்வளவு நேரம் ஆகியும் குரங்கை காணமே ஒரு சிங்கத்தை அழைத்து வர இவ்வளவு நேரமா வரட்டும் குரங்கிற்கு இருக்கிறது என்று நாய் கூறிக் கேட்ட சிங்கம் அலறி அடித்துக் கொண்டு  ஒடியது.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்