படித்த முட்டாள்கள் (Educated idiots)

ஒர் ஊரில் நான்கு நண்பர்கள் இருந்தார்கள். அதில் மூன்றுப் பேர்கள் நல்லபடித்து கற்று தேர்ந்தவர்கள் மற்றும் மந்திர வித்தையிலும் மிகவும் தேர்ச்சிபடைந்தவர்கள்.

மற்ற ஒருவன் கல்விப்படிப்பில் நாட்டம் இல்லாதவன். ஆனால் நல்ல நடைமுறை அறிவு உள்ளவன். பல அனுபவங்கள் பெற்றவன்.

இதில் மற்ற மூவரும் அரசனிடம் தங்கள் திறமையைக் காட்டிப் பொருள் பெறுவதற்காகச் சென்றார்கள். அவர்களுடன் தங்கள் நண்பனா நான்காமவனையும் அழைத்துச் சென்றார்கள்.

அவர்கள் ஒரு காட்டை கடக்க வேண்டியிருந்தது. அப்பொழுது வழியில் ஒரு சிங்கம் செத்து வெறும் எலும்புக் கூடாகக் கிடந்தது.

இதைப் பார்த்த அந்த மூவரும் இதற்கு நாம் கற்ற மந்திர சக்தி மூலம் இந்த சிங்கத்தைப் பிழைக்கச் செய்வோம் என்றனர். அதற்கு நான்காவது நண்பர் இது மிகவும் ஆபத்தான விளைவை நமக்குக் கொடுக்கும் என்றான்.

அந்த மூன்றுப் பேரும் அவன் சொல்லை மதிக்கமால், உனக்கு என்ன தெரியும் என்று அவமானம்ப்படுத்தினர். அவன் பேசமால் போய் ஒரு மரத்தின் மேல் ஏறியிருந்து கொண்டான்.

மற்ற மூவரும், அந்த எலும்புக் கூட்டை எடுத்து தன் மந்திர சக்தியைப் பயன்படுத்தி அதை உயிரூட்டினார்கள். அது முழு சிங்கமாக  உயிர் பெற்று எழுந்தது.

சிங்கத்திற்கு தெரியுமா? இவர்கள்தான் நமக்கு மீண்டும் உயிர்  பெற உதவினார்கள் என்று தன் எதிரில் பார்த்த அவர்கள்  மீது பாய்ந்து அவர்களைக் கொன்றுவிட்டது.

நீதி: 'கல்வியைக் காட்டிலும், அறிவுதான் பெரிது'.Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்