அரக்கனின் ரகசியம் (The Demon's Secret)

முன் காலத்தில், அடர்ந்த காட்டில் ஓர் அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் அந்த காட்டின் வழியாக வந்து ஒரு வலிபனை பிடித்து, அவன் தோள்மேல் ஏறிக் கொண்டான். வாலிபன் அந்த அரக்கனைச் சுமந்துகொண்டு திரிந்தான். அவனுக்கு இது பெரும் வேதனையாய் இருந்தது.

 எப்போது இந்த அரக்கனிடமிருந்து தப்புவோம் என்று காலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

அந்த அரக்கனுடைய காலடிகள் மிகவும் 
மென்மையாக இருக்கக் கண்ட வாலிபன். ஒருநாள் அரக்கனைப் பார்த்து "உனக்கு ஏன் காலடி இவ்வளவு மெல்லியதாய் இருக்கிறது? என்று கேட்டான்.

அதற்கு அந்த அறிவில்லாத அரக்கன் 'நான் குளித்த பின் என் காலில் இருக்கும். ஈரம் முழுவதும் காய்ந்தபின் தான் நடப்பேன். அதனால்தான் என் காலடிகள் மெல்லியனவாக அமைந்துள்ளன'என்று கூறினான்.

ஒரு நாள் அரக்கன், வாலிபன் தோளிலிருந்து இறங்கி குளிக்கச்  சென்றான். குளிர்ந்த நீர் நிறைந்த ஒரு ஆற்றில் அவன் நீராடிக் கொண்டிருந்தான். அவன் நீராடிய பின் காலில் ஈரம் காயும் வரை நிலத்தில் காலூன்றி நடக்க மட்டான் என்பதை அறிந்த வாலிபன்.

இது ஒரு நல்ல தருணம் என்று எண்ணிய வாலிபன் அந்த இடத்தை விட்டு ஓடி மறைந்து விட்டான். அரக்கன் குளித்து முடித்து, காலில் உள்ள ஈரம் காய்ந்தபின் வாலிபனைத் தேடிக் கொண்டு வந்தான்.

வாலிபனைக் காணாத அரக்கன் தான் அறிவில்லாமல் தன்னைப் பற்றிய உண்மையைக் கூறியதால் தான் அந்த வாலிபன் தப்பியோடிவிட்டான் என்று எண்ணி வருந்தினான்.

யாரிடம் எதைச் சொல்லுவது என்று ஆராய்ந்து சொல்லாதவர்கள் இப்படித்தான் துன்பமடைவார்கள்.




Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்