மீனின் சாபம் (Curse of the fish)




ஒரு குளத்தில் மீன்களும், நண்டுகளும் அதிகம் இருந்தன. அதன் அருகில் ஒரு மரத்தில் வயதான கொக்கு ஒன்று வாழ்ந்து வந்தது.

அதனால் பழைய மாதிரி இரைத் தேடி நெடு தூரம் செல்ல முடியவில்லை. ஆகையால் அந்த குளத்தில் இருக்கும் மீன்களையும் அதனால் பிடித்துக் கூட உண்ண முடியவில்லை.

ஆகையால், அந்த கொக்கு ஒரு திட்டம் தீட்டியது. அதன்படி அந்த குளத்தில் உள்ள மீன் தலைவனை சந்தித்து உங்களுக்கு பெரிய ஆபத்து ஒன்று காத்துக் கொண்டு இருக்கிறது. அதை கேட்ட மீனின் தலைவன் நாங்களும் இங்கேதான் இருக்கிறோம் எங்களுக்கு தெரியாது உங்களுக்கு என்ன தெரிந்தது என்று கூறியது.

அதற்கு நேற்று இரவு இரண்டு பேர் வந்து இந்த குளத்தில் நிறைய மீன் இருப்பதாகவும், நாளை அல்லது அதற்கு மறுநாள் வந்து அதனை பிடித்து விற்றால் நமக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று பேசிக் கொண்டு இருந்ததை நான் கேட்டேன் என்று கொக்குக் கூறியது.

இதைக்கேட்ட மீனின் தலைவன் படத்ததுடன், கொக்கு நண்பரே நீங்களே எங்களுக்கு ஒரு வழி கூறுங்கள் என்றது. அதற்கு கொக்கு எனக்கு தெரிந்து இங்கிருந்து பக்கத்தில் இதை விட பெரிய குளம் உள்ளது. அங்கே சென்றால் நீங்கள் உயிர் பிழைக்கலாம் என்று கொக்கு கூறியது. மீனின் தலைவன் நாங்கள் எப்படி அங்கு செல்வது அது எங்களால் இயலாது என்று மீனின் தலைவன் சொன்னது.

இணை தனக்கு சாதகமாக பயன் படுத்திய கொக்கு, என்னிடம் ஒரு யோசனை உள்ளது. என்னால் அதை செய்ய முயலும் ஆனால் இதை உங்களின் மற்றவர்கள் சம்மதம் தேவை என்றது.

அதற்கு, மீனின் தலைவன் என்ன யோசனை என்று கூறுங்கள்? கொக்கு நான் உங்களை ஒவ்வொன்றாக என் அலகால் தூக்கி அந்த குளத்தில் விட முடியும் என்றது.

சரி, நான் என் இனத்திடம் பேசி வருகிறேன். அதைப்போல் மீனின் தலைவன், தன் இனத்திடம் நடந்தை கூறி ஆலோசனை செய்தது.

ஆலோசனைக்கு பிறகு, நாம் அந்த மனிதர்கள் நம்மை கொன்று, விற்பனை செய்து விடுவார்கள். அதற்கு கொக்கின் யோசனையே சிறந்தது என்று அனைத்து மீன்களும் சம்மதம் 
தெரிவித்தன.

அதை, கொக்கிடம் சொன்னது அந்த மீனின் தலைவன். கொக்கும் அதை  செயல்படுத்தியது. ஒவ்வொரு மீனாக கொத்திச் சென்றது, அதை ஒரு உயரமான பாறையின் மீது வைத்து நன்கு வயிறு நிரம்பா உண்டாது. மீதள்ள மீனை பதப்படுத்தி வைத்தது.  இப்படியாக, அனைத்து மீன்களையும் கொன்றது.

 இறுதியாக, மீனின் தலைவனையும் கொன்றது, அது சாகும் நிலையில் கொக்கே எங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாய். நிச்சியம் இதற்கு உண்டான பலனை அனுபவிப்பாய் என்று சொல்லி இறந்தது.

இதைப் பார்த்து கொண்டு இருந்த நண்டு ஒன்று, கொக்கிடம் எங்களுக்கு உதவுமாறு கேட்டது. இதை கேட்ட நண்டு ஆகா, "கண்ணா இரண்டு லட்டு திங்க ஆசையா" என்ற கற்பனையில் நண்டை கொத்திக்கொண்டு பறந்தது.

பறக்கும் வழியில் மீன்முள்களும், செத்த மீன்களும் ஆங்காகே இருப்பதைப் பார்த்த நண்டு, சுதரித்துக் கொண்டு தன் கொடுக்கு மூலம் மீனின் காலுத்தை இறுகப்பிடித்து கொக்கின் கழுத்து நெரிப்பட்டு இறந்தது.

நீதி: "நம்பிக்கை துரோகம்".




Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்