குரங்குக்கு அறிவு சொன்ன கொக்கு (The crane gave wisdom to the monkey)


ஒரு காட்டில் நிறைய குரங்குகள் வசித்து வந்தன. ஒருநாள் இரவு குளிர்தாங்காமல் அவை குளிர் காய்வதற்கு எங்கே போகலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தன.

 அப்போது தூரத்தில் மின்மினிப் பூச்சிகள் பறந்து கொண்டிருப்பதைக் கண்டு தீ என்று நினைத்துக்கொண்டு, அந்த இடத்தை நோக்கிச் சென்றன.

குரங்குகள் பேசிக்கொண்டதைக் கேட்டு, மரத்தில் மேல் உட்கார்ந்திருந்த ஒரு கொக்கு 'குரங்குகளே அது தீயல்ல', மின்மினிப்பூச்சி என்று கூறியது.

இதைக்கேட்டதும் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு குரங்குக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. உடனே அது மரத்தின் மேல் பாய்ந்து சென்று அந்தக் கொக்கைப் பிடித்து, 'நீ பா எனக்கு அறிவு புகட்டுகிறவன்?. என்று கேட்டு அப்படியே ஒரு பாறையில் அடித்துக் கொன்றது.

நீதி: "தீயவர்களுக்கு நல்லது சொல்லக்கூடாது".

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்