புத்தரின் அவமானம் (Buddha's humiliation)



ஒரு கிராமத்தில் வழியாக சென்ற போது அந்த ஊர் மக்கள் அவரை அவமதித்தார்கள்.

மிகவும் கேவலமாக, மோசமாக ஏசினார்கள்.
அவற்றை எல்லாம் அமைதியாக கேட்டார். பிறகு,  "நீங்கள் இன்னும் ஏதாவது கூற விரும்புகிறிர்களா?".

ஏனென்றால் அடுத்த கிராமத்திற்கு நான் குறிப்பிட்ட நேரத்திற்கு  செல்ல வேண்டும். அங்கு எனக்காகப் பலர் காத்திருப்பார்கள்.

தாங்கள் இன்னும் எதேனும் சொல்ல விரும்பினால் இவ்வழியே நான் வரும் போது நேரம் ஒதுக்குகிறேன்.

அப்போது நீங்கள் சொல்ல
வேண்டியதை சொல்லுங்கள் என்றார்.

அவ்வூர் மக்கள் ஆச்சரியமடைந்தார்கள்.
நாங்கள் ஏதோ ஒன்றை உங்களிடம் 
சொல்லவில்லை.

உங்களை அவமானப்படுத்திக் கொண்டல்லவா இருக்கிறோம்? என்றார்.

புத்தார் சிரித்தார், அப்படியா! என்னை அவமானப்படுத்த நீங்கள் கொஞ்சம் காலம் தாழ்த்தி வந்துவிட்டீர்கள், குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டும்!

இப்போது நான் அந்த அளவுக்கு முட்டாள் இல்லை!

நீங்கள் என்னை அவமானப்படுத்துங்கள். அது உங்களுக்குள்ள சுதந்திரம், ஆனால் அதை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் எனது சுதந்திரம்.

இப்போது அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை!  என்றார்.
அவர் மேலும் கூறினார் உங்களது கிராமத்திற்கு வருவதற்கு முன்பு ஒரு கிராமத்தைக் கடந்து வந்தேன்.

அங்கிருந்த மக்கள் எனக்குத் தருவதற்காக இனிப்புகள் கொண்டு வந்தனர். நான் அவர்களுக்கு நன்றி கூறினேன். அவர்களிடம் நான் இனிப்பு உண்பதில்லை எனவே எனக்கு இனிப்புகள் வேண்டாம் என்று கூறினேன்.

எனவே, அந்த இனிப்புகளை அவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று கேட்டார்.

அந்த கூட்டத்திலிருந்த ஒருவர் அவர்கள் அதனை திருப்பி வீட்டிற்கு எடுத்துச் சென்றிருப்பார்கள் என்றார்.

உடனே புத்தர் இப்போது நீங்கள் என்ன செய்வார்கள்? எனக்கு ஏற்படுத்திய அவமானங்களை இப்போது நீங்களும் திரும்ப வீட்டிற்கு எடுத்து செல்ல வேண்டியது தான்.

நான் உங்களது அவமதித்தலை ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு வழியில்லை என்று கூறினார்.

When he passed through a village, the villagers insulted him.

 Very nasty, badly abused.
 He listened to them all in silence. Then, "Is there anything else you want to say?".

 Because I have to go to the next village within the specified time. Many will be waiting for me there.

 If there is anything else you want to say, this way I will make time when I come.

 Then you say
 Say what you want.

 The people were surprised.
 We have something for you
 Didn't say.

 Aren't we humiliating you? said.

 Buddha laughed, so! You've come a long way to humiliate me, at least ten years ago!

 Now I'm not that stupid!

 You insult me. That is your freedom, but it is my freedom to accept it or not.

 Now I don't accept that! said.
 He further said I passed through a village before coming to your village.

People there brought sweets to give me. I thanked them. I told them I don't eat sweets so I don't want sweets.

 So, what do you think they would have done with those desserts? he asked.

 Someone in the crowd said they would have turned it around and taken it home.

 What will the Buddha do now? Now you have to take the insults you caused me back home.

 I do not accept your insult. He said there was no other option.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்