சிங்கமும், கரடியும்

ஒரு சிங்கமும், கரடியும் சேர்ந்து ஒரு மானை வேட்டையாடியது. வேட்டையாடிய மானைப் பங்கு போடுவதில் சிங்கத்திற்கும், கரடிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதுவே பயங்கரமான சண்டையாக மாறியது.
வெகுநேரம் சண்டை செய்ததால் இரண்டும் களைப்படைந்துத் தரையில் சாய்ந்தன. இதை வெகுதூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு குள்ளநரி ஒடி வந்து மானைத் தூக்கிக்கொண்டு ஓடியது.

சிங்கமும், கரடியும் சண்டைப் போட்டக் களைப்பில் அதுகளால் எழவே முடியவில்லை. அப்பொழுதுதான் இரண்டும் இப்படி வீனாகச் சண்டைபோட்டுக் கொண்டு நமக்குரிய இரையை இழந்து விட்டோமே என்று எண்ணி வருத்தப்பட்டன.

நீதி: ஒற்றுமையே பலம்.



Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்