கூடா நட்பு

நண்பர்களே, ஒரு பிரச்சனை வந்த அத நாமளே பேசித் தீர்ப்பது நல்லது அத விட்டு நம்ம பிரச்சனையை அடுத்த அல்லது தெரியாத நபரிடம் ஆலோசனை கேட்கலாம் முற்றிலும் அவர்களிடம் தீர்வு காண்பது தவறான ஒன்று.

அப்படி இக்கட்டான சூழ்நிலை வரும் பச்சத்தில் நமக்கு தெரிந்து நம்மிடம் அக்கறை காட்டும் நல்ல நண்பர்கள், ஏன் நாம் பெற்றோர்களை விட சிறந்த நபர்கள் யார் இருக்க முடியும்.

ஆனா இங்கு சிலப்பேர் தெரியாத நபர்களை நம்பி அவர்களின் வாழ்க்கையை ஏன் அவர்கள் உயிர்க்கு கூட ஆபத்தாக முடிகிறது.

அப்படிப்பட்ட ஒரு கதையை தான் இப்ப பார்க்கபோரம்.



ஒரு காட்டுல முயல் ஒன்று இருந்தது. நண்பர்களே நமக்கு தெரியும் முயல் எவ்வளவு அழகானது, சுத்தமானது என்று. அந்த முயல் தனக்கு ஓர் அழகான வீடு கட்டியது ரெம்ப சந்தோசமாக வாழ்ந்து வந்தது.

தானக்கான இரையை தேடி ஒருநாள் வெளியே சென்றது. அந்த சமயத்தில ஒரு எலி அந்த பக்கம் வந்தது அப்ப முயலின் அழகான வீட்டை பார்த்தது.

எலியை பத்தி நமக்கு தெரியும்தானா நண்பர்களே ஒரு இடத்துக்கு போன அந்த இடத்தை எவ்வளவு அலங்கோலம் பண்ணிரும்.

அதைப்போல் முயல் வீட்டை சும்மா விடுமா அந்த வீட்ட ஒரு குப்பை கிடங்க மாற்றிச்சு. அங்க இருக்கிற சாப்பாட சாப்பிட்டு நல்ல தூங்கிட்டு இருந்தது.


அந்த நேரம் வெளியே போன முயல் தன் வீட்டுக்கு வந்து பார்த்தது. அந்த வீட்டின் நிலைமையை பார்த்து ஒரு நிமிடம் அதற்கு தலையே சுற்றின. ஆனால் ஏதும் நடக்காதப்போல் நல்ல தூங்கிட்டு இருந்தது.

அதை பார்த்த முயலுக்கு மேலும் கோபம் அதிகமானது. எலியை ஒரு மீதித்து. அதனால் கோபமான எலியும் முயலுடன் சண்டைப்போட்டது.

அந்த நேரம் ஒரு நரி தனக்கு இரை கிடைக்காத வருத்ததில் வந்துக்கொண்டு இருந்தது. இதை பார்த்த நரிக்கு மிகவும் சந்தோசமானது.

நரி தன் புத்தியை யூஸ் பண்ணியது. முயலையும், எலியையும் பார்த்து நீங்க ரெம்ப நேரமாக சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க உங்க பிரச்னை என்னனு சொன்னிங்கன.


அத நான் தீர்த்து வைக்கிறேன் என்று சொன்னது. இரண்டுப்பேர்களும் நரியின் பேச்சை நம்பி. முயலும், எலியும் போய் நரி சொன்ன இடத்திற்கு போனது. அந்த இடம் ஒரு வழி பாதை போன வழியேதான் வர முடியும். அந்த வழியில் நரி வந்து நின்றுகொண்டது.

தாமாக மாட்டிக்கொண்டதை உணர்ந்த முயலும், எலியும் தப்பிக்க வழியில்லாமல் விழித்தன.

பின்பு அந்த நரி இரண்டையும் ஓன்று ஒன்றாக ரசித்து, ருசித்து சாப்பிட்டது.

நீதி: கூடா நட்பு கேடாய் முடியம் 







Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்