காக்காயும், மண் பானையும்



ஒரு மரத்தில் ஒரு காக்கா வசித்து வந்தது. அது ஒரு நாள் இரை தேடி வெகு பறந்து சென்றது. ஆனால், எதுவும் கிடைக்கவில்லை திரும்ப கூட்டுக்கு வரும்பொழுது அதற்கு ரெம்ப தாகம இருந்துச்சு.

ஆதலால் ஓர் இடத்தில் நின்று தனக்கு தண்ணீர் கிடைக்குமானு பார்த்துச்சு.

 எதுவும் தென்பாடல மீண்டும் பறந்துச்சு தாகமா தொண்டைய கவுச்சு அதற்கு மேல் பறக்கமுடியல அந்தநேரத்தில் ஒரு வீட்டுபக்கத்தில் ஒரு பெரிய பானை இருந்தது. அதில் சிறிய அளவு தண்ணீர் இருந்தது.




 எவ்வளவு முயற்சிச்செய்தும் தண்ணீர் அதற்கு எட்டவில்லை. மனம்தாரளாத காக்கா அந்த பசியிலும் அருகில் இருந்த சிறு கல்களை  ஒவ்வொரு கல்லாக எடுத்து அந்த பானையில் போட்டது.

ஒரு சமயத்தில் பானையின் அடியில் இருக்கும் தண்ணீர் மேல வர தொடங்கின. கல்லு சேரசேர தண்ணீர் மேலே வந்தது. பிறகு தாகம் தீர நன்றாக குடித்து விட்டு அங்கிருந்து தன் கூட்டை நோக்கி மகிழ்ச்சியாக கிளம்பியது.

நீதி: "விடா முயற்சி விஸ்வரூபம் வெற்றி".




Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்