சொர்க்கம்ஒர் ஊரில் ஒரு நாய் இருந்தது. அந்த ஊரில் பஞ்சம் வந்தால் உணவு கிடைக்கவில்லை. ஆகையால் அந்த நாய் வேறு ஒர் ஊருக்கு சென்று அந்த ஊரில் இருந்தெ ஒரு பெண் அந்த நாய்க்கு நாள்தோறும் சோறிட்டுக்காப்பாற்றி வந்தாள்.

ஒருநாள் அந்த நாய் தெருப் பக்கமாக வந்தது. தெருவில் இருந்த மற்ற நாய்கள் எல்லாம் உறுமியும் குரைத்தும் அதை விரட்டிக்கொண்டு வந்து மேலே லிழுந்து கடித்துக் குதறி விட்டன. மேலும் சிறிது நேரம் இருந்தால் அது செத்துப் போயிடும் போலிருந்து. போதும் போதும் இந்த ஊர் வாசம் என்று எண்ணிக்கொண்டே ஒரே ஒட்டமாகத் தன் ஊருக்குத் திரும்பியது.

ஊடுக்குள் நுழைந்ததும் அந்த ஊர் நாய்களெல்லாம் அதைச் சூழ்ந்துக் கொண்டு, நீ போயிருந்த நாடு நல்ல நாடுதானா? என்று கேட்டன.

எல்லா நாடுகளிலும் அது சிறந்த நாடுதான். ஆனால், நம் இனத்திலேதான் ஒற்றுமை இல்லை. அதனால் தான் இப்படித் துன்பமடைய  நேரிட்டது. ஒருவன் தன் இடத்திலே இருப்பதுதான் சிறந்தது' என்று அந்த நாய் மற்ற நாய்களிடம் கூறியது.Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்