கழுதையின் பொறாமை குணம்

நாம் பலர் அடுத்தவர்களை பார்த்து பொறாமைப்படும் குணம் அதிகமாக இருக்கும். நமக்கு நம் எப்படி இலக்குகளை அடைவது அதற்கு உண்டான திறமைகள் என்ன, நம் தேவைகள் என்ன என்பதை யாரும் அவர்களைப்பற்றி சுய பரிசோதனை செய்வதுயில்லை.

ஆனால் நாம் அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு (compare with others) பொறாமை கொள்ளுவதும் நம்முடைய சுய மரியாதையை (self respect) இழந்து விடுகிறோம்.

அப்படி உண்டான கதையை தான் இங்கு பார்க்கப்போகிறோம் வாங்க கதைக்கு போகலாம்.

ஒரு ஊருரில் ஒரு பண்ணயார் இருந்தார். அவர் ஒரு நாயை வளர்த்து வந்தார். அந்த நாய் அவர்க்கு ரெம்ப செல்லம் அவர் வீட்டில் இருந்தால் அவருடன் விளையாடுவதும், அவர் மேல தவுவதும், அவர் மடியில் படுத்துக் கொள்ளுவதும் ஆக மொத்தம் அந்த நாய் அவருக்கு ஒரு குழந்தைப்போல் இருந்தது.

நமக்கு தெரியும் பண்ணை வீடு என்றால் அங்கு ஆடு, மாடு, கழுதை, கோழி போன்ற விலங்குகள் இருக்கும்.

அதில் கழுதை அந்த நாய்க்கு நல்ல நண்பன். தினமும் இருவரும் சந்தித்து கொள்வது வழக்கம் மற்றும் அன்று நடந்த விஷயங்களை பேசி கொள்ளும்.

அதில் நாய் தன் செய்வதையும், பண்ணையார் தன் மீது காட்டும் அன்பையும், அது செய்யும் சிலுமிசகளும் மற்றும் அவர் மடி மேல் மீது படுத்துக் கொள்ளுவதை கழுதையிடம் பெருமையாக பேசும். இதை கேட்ட கழுதை, நாயின் மீது பொறாமை வரும்.

ஒரு நாள் கழுதை நாமும் அவருக்காக நாயை விட அதிகமாக உழைக்கிறோம்.
ஆனால், நாய் மட்டும் அவர் மடியில் படுக்கிறது, அவருடன் விளையாடுகிறது என்று தன் நிலை அறியாமல் நாயுடன் ஓப்பிட்டது.

ஒரு நாள் பண்ணையார் வீட்டில் ஒய்வு எடுத்துக்கொண்டு இருந்தார். அப்ப கழுதை, பண்ணையாரை பார்த்து அவர் மேல் தாவியது அதை எதிர்பாராத பண்ணையார் நிலை தடு மாறி கீழ விழுந்தார்.

 மேலும் கழுதை கீழ விழுந்த அவர் மடிமேல் படுத்துக் கொண்டது. இதனால் பண்ணையார்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

இதை பார்த்த அவரின் வேலையைட்கள் அந்த கழுதையை உருட்டுக் கட்டையால் நன்கு அடித்து போட்டனர்.

நீதி: "மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம்".Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்