பிச்சைக்காரனும், மந்திர மண் பானையும்ஒரு பிச்சைக்காரன் இருந்தான். அவன் ஒவ்வொரு வீட்டிலும் பிச்சை எடுத்து தன் வாழ்நாளை கழித்துகொண்டு இருந்தான்.

அவன் ஒரு நாள் பிச்சை எடுத்துகொண்டு இருக்கும்போது அவனக்கு கீழே ஒரு பை இருந்ததை பார்த்தான், அதை எடுத்து உள்ளே என்னனு பார்த்தான். அந்த பையில் ஒரு மண் பானை இருந்தது.

அந்த மண் பானை பார்ப்பதற்கு மிகவும் சிறிதாகவும், அழகாவும் இருந்தது. அதை பார்த்து இது வேற நாமா இருக்குற நிலைமையில் என்று சலித்துக்கொண்டான்.

அதை தன் பையில் வைத்துவிட்டு வீட்டுக்கு போனான். வீட்டில் அந்த பானையை அருகில் வைத்து விட்டு சாப்பாட்டு பொட்டலாத்தை எடுத்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது கை தவறி சிறிது சாதம் அந்த மண் பானையில் விழுந்தது.

விழுந்த சாதம் அப்படியே அந்த பானை முழுவதும் நிறைம்பியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்தான்.

பின்பு அதை ஒரு தட்டில் வைத்து விட்டு. அதில் ஒரு நாணயத்தை போட்டான், அந்த பானை முழுவதும் நாணயமாக நிறைம்பியது.

ஆக நமக்கு ஒரு மந்திர பானை கிடைச்சுருக்கு. இதாவச்சு நாம் நிறைய பணம் பண்ணலாம். இனிமேல் நான் பிச்சை எடுக்கவும் தேவையில்லை, எந்த வேலைக்கு போகவும் தேவையில்லை.

 இனி நான்தான் இந்த ஊருரில் பெரிய பணக்காரன் என்று மகிழ்ச்சி அடைந்தான்.

 பின்பு அந்த பானையை ஒரு பையில் வைத்து ஒரு இடத்தில் தூங்க விட்டான்.
இந்த மகிழ்ச்சியில் அவனக்கு தூக்கம் வரவில்லை. அப்படியே படுத்து கனவு காண ஆரம்பித்தான்.

அப்படியே கனவில் நாம் இந்த பானையை வைத்து நிறைய பணத்தை எடுத்து நமக்கு ஒரு சொந்தமா பெரிய வீடு, கார், நகைகள் மேலும் நமக்குன்னு ஒரு தொழில், நம்மளை சுற்றி வேலையட்கள். பிறகு என்ன ஒரு அழகான மனைவி, குழந்தைகள் இப்படியே கற்பனை போய்க்கொண்டு இருந்தது. அந்த கற்பனையில் பெரிய வீட்டில் நல்ல அறுசுவை உணவை உண்ட மயக்கத்தில், பஞ்சு மெத்தையில் படுத்து உறங்கிகொண்டு இருந்தான் அப்ப அவன் வளர்த்த நாய், அவன் காலையை நக்கியது. அவன் தூக்கத்தில் அட ச்சி நாயே ஒரு உதைத்தான். அப்பொழுது ஏதோ பானை உடையும் சத்தத்தை கேட்டு விழித்து பார்த்தான்.

அப்பத்தான் அவன் உணர்ந்தான் ஆக எவ்வளவு நேரம் நாம் கண்டது கனவா,  அப்ப உடைந்தது என்ன? அந்த மந்திர பானையா! ய்யோ எல்லாம் கனவா போச்சா. இனி காலமெல்லாம் பிச்சைத்தான் எடுக்கணுமா? இதுதான் என் தலை எழுத்தா என்று பொழப்பினான்.

நண்பர்களே, இதில் நமக்கு உண்டான படிப்பினை "கஷ்டப்படாமல் கிடைக்கும் எதுவும் நிலைக்காது".
Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்