அரசனும், சேவகனும்



அரசன் ஒருவன் இருந்தான்.  அவன் சகுணங்களின் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். ஒருநாள் அரண்மனை ஜோதிடரை அழைத்து எனக்கு ஒவ்வொரு நாளும் நல்ல நாளாக அமைய என்ன செய்ய  வேண்டும் என்று கேட்டார்.

 அதற்கு ஜோதிடர் அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைளை ஒன்றாக பார்த்தால் இந்த நாள் இனிதே அமையும் என்றார்.

அதன்படி, அரசர் தன் சேவகனை அழைத்து. நான் காலையில் எழும்போது இரண்டு காகங்கள் இருக்கும் மாறு ஏற்பாடு செய்யவும் என கட்டளையிட்டார்.

அதைப்போல், தினமும் காலையில
 சேவகன் வீதிக்கு சென்று பார்ப்பான். ஒரு நாள் அரண்மனை தோட்டத்தில் இரண்டு காகங்கள் இருப்பதை பார்த்தான். அடடா! நல்ல சகுணம், இன்று அரசிடம் காண்பித்து நல்பேர் எடுக்க வேண்டும் என்று அரசரை அழைத்து தோட்டத்துக்கு வந்தான். அப்பொழுது அந்த காகங்கள் அங்கே இல்லை. இதைப் பார்த்த அரசருக்கு கோபம் வந்தது. அவனுக்கு பத்து கசைடி கொடுக்க உத்தரவு விட்டார்.

இதைக் கேட்ட சேவகன் சிரிக்க ஆரம்பித்தான். அரசருக்கு மேலும் கோபம் அதிகமானது. உன் சிரிப்புக்கு உண்டான காரணத்தை கூறவிட்டால் உனக்கு மேல் பத்து கசைடி என்றார்.

சேவகன், மாமன்னரே இந்த ஒரு நாள் இரண்டு காகங்களை ஒன்றாக பார்த்த எனக்கு இவ்வளவு நல்லது நடக்கிறது  என்று கூறி நிறுத்திவிட்டான்.

இதை கேட்டு அரசர் தன் அறியாமையை உணர்ந்து. அன்று முதல் ரைசர் சகுணம் பார்ப்பதை விட்டு விட்டார்.

மேலும் இனி எனக்கு அரண்மனை ஜோதிடர் தேவையில்லை என்று அந்த பதவியை எடுத்துவிட்டார்.

தன் அறியாமையை உணரவை
வைத்த சேவகனுக்கு, அரச ஆலோசராக பதவி உயர்வு அளித்தார்.





Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்