நன்றிக்கெட்ட சிங்கம்

பாண்டியன், அவர் ஒரு இயற்கை மிகுந்த ஆர்வம் உடையவர், ஆதலால் அவர் அடிக்கடி காட்டுக்கு சென்று தன் பொழுதை போக்குவார். இப்படி ஒரு சமயம் காட்டுக்கு சென்றார்.

 அப்பொழுது ஒரு சிங்கக்குட்டி தன் தாயை பிரிந்து வழித் தவறி வந்தது இதை பார்த்த பாண்டியன் அதை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.  அதை தன் பிள்ளைப்போல் வளர்த்து வந்தாரு.

அதுவும் அவருடன் மிகவும் அன்புடன் பழகிவந்தது. இப்படியே காலம் சென்றன. அது குட்டியில் இருந்து வெறும் காய்கறிகளை மட்டும் சாப்பிட்டு வந்தது. நல்ல ஒரு கம்பிரமான தோற்றம் உள்ள பெரிய ஆண் சிங்கமாக வளர்ந்து இருந்தது.

ஒரு நாள் பாண்டியன் அதற்கு சாப்பாட்டுக்கு காய்களை வெட்டிக் கொண்டு இருந்தார் அப்பொழுது கை தவறி தன் கைகளை வெட்டிக் கொண்டார்.

கைகளில் ரத்தம் வழிந்து தரையில் விழுந்தது. அதை சிங்கம் நக்கியது, அதன் சுவை அதற்கு பிடித்துப்போக இதுவரை இல்லாத ஒரு புது உணர்ச்சி வெளிப்பட்டது.

அதன் உணர்ச்சியால் பாண்டியணை அடித்துக் கொன்றது.

நீதி: "நன்றி கெட்டவர்களுக்கு உதவி செய்வதை நிறுத்துங்கள்".



Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்