கழுதையும், வண்ணானும்



ஒரு ஊரில் வண்ணான் ஒருவன் இருந்தான். அவன் கழுதை ஒன்றை வளர்த்து வந்தான். அதில் தன் அழுக்கு துணி மூட்டைகளை யெல்லாம் அதன்மேல் ஏற்றி ஆற்றுக்கு எடுத்து சென்று, அங்கு துவைத்த முடித்த துணிகளை பின் மீண்டும் ஏற்றிக்கொண்டுவருவான்.

ஆனால், அதற்கு உண்டான உணவை அவர் சரியாக வைப்பதில்லை, இருந்தும் கழுதையின்  வயிற்றை நிரப்ப அவன் ஒரு வேலை செய்தான்.

இரவு நேரத்தில் அந்தக் கழுதையின் மேல் ஒரு புலித்தோலைப் போட்டுப்  போர்த்தி, அதை அருகில் உள்ள வயலில் மேயவிட்டு விடுவான். கழுதை வயிறு நிறையப் பச்சைப் பயிரை மேய்ந்து நன்றாகக் கொழுந்து வளர்ந்தது. வண்ணானுக்கும் மிகுந்த வேலை பார்த்தது.

இரவில் வயலைக் காவல் செய்பவர்கள் கழுதையைக் கண்டவுடன் புலி என்று நினைத்துக்கொண்டு பயந்து ஓடிப்ே பே போவார்கள். அது வேண்டுமட்டும் மேய்ந்து விட்டுப் போகும். இப்படி  நெடுநாள் நடந்து வந்தது.

புலி பசித்தாலும் புல்லைத் தின்னுமா என்று பழமொழியிருக்கிறது. ஆனால், இப்பொழுது புலி நெல்லைத் தின்னும் புதுமையைப் பார்க்கிறோம். "எல்லாம் கலிகாலம்" என்று எல்லோரும் எண்ணி வியப்பு கொன கொண்டிருந்தார்கள்.

அவர்களில் ஒரு தைரியச்சாலி இருந்தார்.
இது உண்மைதானா, அல்லது சூழ்ச்சியா என்று அறிந்து கொள்வதற்காக அந்தத் தைரியசாலி, கையில் ஒர் ஈட்டியை ஏந்திய வண்ணம், கம்பளத்தால் தன் முழுவதும் மூடிக்கொண்டு ஓர் இடத்தில் ஒளிந்திருந்தான்.

வழக்கம் போல் பயிர் மேய்வதற்காகக் கழுதை வந்தே நேரம் பார்த்து அவன் எழுந்திருந்தான். கம்பளப் போர்வையோடு வந்த உருவத்தைக் கண்டதும், அது பெட்டைக் கழுதை என்று நினைத்துக்கொண்டு, புலித்தோல் போர்த்திய கழுதை கத்தத் தொடங்கியது. அதன் குரலைக் கேட்டவுடன்,  அவன், பூ! நீ ஒரு கழுதைதானா? சரி, இதோடு ஒழிந்துபோ! என்று தன் கையில் வைத்துயிருந்த ஈட்டியால் ஓங்கி ஒரு குத்துக்குத்தினான்.

அவ்வளவுதான்! கழுதை சுருண்டு பிணமாக விழுந்தது. '




Children's Book

There was a man in a town. He was rearing a donkey. He loads all his dirty clothes on it and takes it to the river, and after washing it, he loads it again.

 But he does not put the food right for it, and yet he does a job to fill the belly of the donkey.

 At night he wraps a tiger skin over the donkey and grazes it in a nearby field. The donkey's stomach grazed on plenty of green crops and grew well fatted. Vannan also did a lot of work.

 When the night guards see a donkey, they think it is a tiger and run away. It will graze as long as it wants. This has been going on for a long time.

 It is said that even if a tiger is hungry, it will eat grass. But now we see the novelty of tiger eating paddy. Everyone was amazed thinking that "everything is Kalikalam".

 Among them was a brave man.
 To find out whether this was true or a ruse, the brave man, carrying a spear in his hand, covered himself with a carpet and hid in a place.

 As usual he got up when the donkey came to graze the crops. On seeing the figure with the carpet, thinking it was a pack donkey, the tiger-skinned donkey started braying. On hearing its voice, he said, Boo! are you an ass Well, get over it! With the spear in his hand, Ongi gave a stab.

 That's it! The donkey curled up and fell dead. '

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்